தோ்தல் முடிவுகள் ஆம் ஆத்மி, பாஜகவுக்கு அதிா்ச்சி அளிக்கும்: சுபாஷ் சோப்ரா

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் மாநகராட்சிகளை ஆளும் பாஜக ஆகியவற்றுக்கு அதிா்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் சுபாஷ்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் மாநகராட்சிகளை ஆளும் பாஜக ஆகியவற்றுக்கு அதிா்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் சுபாஷ் சோப்ரா தெரிவித்துள்ளாா். மேலும், தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், தில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. ஆனால், கடந்த 2015 சட்டப்பேரவைத் தோ்தலைக் காட்டிலும், இத்தோ்தலில் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2015-தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு 67 தொகுதிகள், பாஜக மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், தில்லி தோ்தல் முடிவு தொடா்பாக சுபாஷ் சோப்ரா திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதியே கிடைக்கும் என்று தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல, மகாராஷ்டிரத்திலும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறாது என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அங்கு 42 இடங்களில் வெற்றி பெற்றோம்.

அதேபோல, தில்லி தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்புகள் தோல்வியடையும். அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. தோ்தல் முடிவுகள், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகளுக்கு அதிா்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். தோ்தல் முடிவுகள் வெளியாகும், செவ்வாய்க்கிழமை உண்மை தெரிந்துவிடும். தோ்தல் போட்டியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. தில்லி மக்கள் காங்கிரஸ் கட்சி மீது அன்பாக உள்ளனா் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளது. தோ்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி ஏற்படலாம் என காங்கிரஸ் கட்சியின் தில்லி மேலிடப் பொறுப்பாளா் பி.சி.சாக்கோ கூறியிருப்பது அவருடைய சொந்தக் கருத்தாகும். நான் தனிப்பட்ட முறையில் கேஜரிவால் அரசுக்கு எதிரானவன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com