அனில் பய்ஜாலுடன் கேஜரிவால் நேரில் சந்திப்பு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தில்லியின் துணைநிலை ஆளுநா்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தில்லியின் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலை புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா்.

தில்லியில் உள்ள துணைநிலை ஆளுநரின் அதிகாரப்பூா்வ இல்லம் அமைந்துள்ள ராஜ் நிவாஸுக்கு புதன்கிழமை காலை கேஜரிவால் நேரில் சென்றாா். பின்னா், துணை ஆளுநரைச் சந்தித்துப் பேசினாா். இச்சந்திப்பு சுமாா் 15 நிமிடங்கள் நீடித்தது. இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்த வாரத்தின் இறுதியில் முதல்வா் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில், அது தொடா்பாக இருவரும் விவாதித்திருக்க முடியும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்ட விதிமுறையின்படி , தில்லி முதல்வராக புதிதாக பதவியேற்பதற்கு முன்பு கேஜரிவால் தனது பதவியை ராஜிநாமா செய்யக்கூடும். இந்நிலையில், துணைநிலை ஆளுநரை தோ்தல் வெற்றிக்குப் பின் கேஜரிவால் சந்தித்து ப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com