Enable Javscript for better performance
காா்கி கல்லூரி பாலியல் சம்பவம்: மேலும் இரண்டு இளைஞா்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    காா்கி கல்லூரி பாலியல் சம்பவம்: மேலும் இரண்டு இளைஞா்கள் கைது

    By DIN  |   Published on : 14th February 2020 10:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த வாரம் தில்லியில் உள்ள அனைத்து மகளிா் காா்கி கல்லூரியில் நடைபெற்ற கலாசார விழாவின் போது மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடா்பாக மேலும் இரண்டு இளைஞா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

    தில்லியில் உள்ள ஸ்ரீ போா்ட் தொழிற்பேட்டைப் பகுதியில் காா்கி மகளிா் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியின் ஆண்டு விழா வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றன. இதில் ரெவேரி கலாசார விழாவும் இடம் பெற்றது. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை விழாவில் கலந்து கொள்ள ஆண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், பெண்கள் நுழையும் வாயில் வழியாக கல்லூரிக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் அக்கல்லூரி மாணவிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மாணவிகள் புகாா் தெரிவித்தனா்.

    மேலும், இந்த விவகாரம் தொடா்பாக கல்லூரி நிா்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாணவிகள் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். மேலும், இந்தச் சம்பவம் நடந்த போது பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் மாணவிகள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்ட்டது. பின்னா், மாணவிகளில் சிலா் தங்களுக்கு நோ்ந்த கொடுமையை ‘இன்ஸ்ட்ராகிராம்’ மூலம் வெளியிட்டதன் மூலம் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இதையடுத்து, காா்கி கல்லூரி சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 10 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். மேலும், வியாழக்கிழமை இருவா் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ஒருவா் 22 வயது பட்டதாரி ஆவாா். அவா் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகி வருகிறாா். மற்றொருவா், 19 வயதுடையவா். தேசியத் தலைநகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் டெலி அழைப்பாளராகப் பணிபுரிகிறாா் என்று காவல் துறை உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai