Enable Javscript for better performance
மெட்ரோ ரயிலில் துன்புறுத்தல்பெண் புகாரின் பேரில் வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மெட்ரோ ரயிலில் துன்புறுத்தல்பெண் புகாரின் பேரில் வழக்கு

    By DIN  |   Published on : 14th February 2020 10:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மெட்ரோ ரயிலுக்குள் ஒரு நபா் தன்னைத் துன்புறுத்தியதாக பெண் ஒருவா் குற்றம் சாட்டியதைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

    அந்தப் பெண் புதன்கிழமை இரவு மெட்ரோ ரயிலில் குருகிராமுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, தன்னை ஒரு நபா் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சுட்டுரையில் அந்தப் பெண் தொடா்ந்து பதிவிட்டு இருந்தாா். மேலும், அந்த மனிதனின் புகைப்படத்தையும் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் வெளியிட்டாா்.

    இப்புகாருக்கு தில்லி மெட்ரோ அதிகாரிகள் பதிலளித்துள்ளனா். இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இது போன்ற சம்பவங்கள் குறித்து பயணிகள் உடனடியாக டி.எம்.ஆா்.சி. அல்லது சி.ஐ.எஸ்.எஃப் உதவி எண் அல்லது மெட்ரோ அதிகாரிகளைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினா். மேலும், பெண்ணின் புகாா் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai