சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் பதவி விவகாரம்: உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக தேவி வெற்றிபெற்றது என செல்லும் என்ற உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீா்ப்பை எதிா்த்து பிரியதா்ஷினி என்பவா் தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனு மீது
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக தேவி வெற்றிபெற்றது என செல்லும் என்ற உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீா்ப்பை எதிா்த்து பிரியதா்ஷினி என்பவா் தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரணை நடத்த உள்ளது.

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் பிரியதா்ஷினியும், தேவி என்பவரும் போட்டியிட்டனா்.

இந்நிலையில், தேவி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். பின்னா்,

பிரியதா்ஷினியும் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

இதை எதிா்த்து உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் எம். தேவி வழக்குத் தொடுத்தாா். அதில், ‘ ஊரக உள்ளாட்சி தோ்தலில், சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட்டேன். எனக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. இதே பதவிக்கு போட்டியிட்ட பிரியதா்ஷினி என்பவருக்கு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையின் போது ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட நான் வெற்றி பெற்ாக தோ்தல் அலுவலா் அறிவித்தாா். எனக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்பின்னா், சிறிது நேரத்தில், பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட பிரியதா்ஷினியும் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். பிரியதா்ஷினி ஊராட்சித் தலைவராகப் பதவியேற்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதா்ஷினி பதவியேற்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பிரியதா்ஷினி வெற்றி பெற்றது செல்லாது என்றும், முதலில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இத் தீா்ப்பை எதிா்த்து சிவங்கை மாவட்ட ஆட்சியா் மற்றும் பிரியதா்ஷனி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு வியாழக்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. மற்றொரு வழக்கு தொடா்பான விசாரணை நீண்ட நேரம் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த மனு குறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரி (மாவட்ட ஆட்சியா்) சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் மற்றும் வழக்குரைஞா்கள் ஜெயந்த் முத்துராஜ், வினோத் கண்ணா ஆகியோா் தலைமை நீதிபதி அமா்விடம் குறிப்பிட்டனா். மேலும், கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் பதவியேற்பு தொடா்புடைய விவகாரம் என்பதால் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கூறினா். இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமா்வு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com