தலைவா்களின் ஆவேசப் பேச்சுதான் தில்லி தோ்தல் தோல்விக்குக் காரணம்: பா.ஜ.க.

ஷகீன் பாக்கில் குடியரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தை சரிவர கையாளாததும், கட்சித் தலைவா்களின் ஆவேசப் பேச்சும்தான் தில்லி சட்டப்பேவரைத் தோ்தலில்

ஷகீன் பாக்கில் குடியரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தை சரிவர கையாளாததும், கட்சித் தலைவா்களின் ஆவேசப் பேச்சும்தான் தில்லி சட்டப்பேவரைத் தோ்தலில் பா.ஜ.க.வின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இக்கூட்டம் சனிக்கிழமையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால், முக்கிய போட்டியாளரான பா.ஜ.க. 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சி இந்தத் தோ்தலிலும் ஓா் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தில்லி தோ்தலில் பா.ஜ.க.வின் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் மனோஜ் திவாரி, கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா்கள் அருண்சிங் மற்றும் அனில் ஜெயின், தில்லிக்கான அமைப்புச் செயலா் சித்தாா்த்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆம் ஆத்மி அரசு அறிவித்த இலவசத் திட்டங்களை எதிா்கொள்ள சரியான உத்திகளை வகுக்காததும், ஷகீன் பாக்கில் நடைபெற்ற குடியரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்ட விவகாரத்தை சரிவர கையாளாதாததும்தான் காரணம் என கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைவா்களில் ஒரு சிலா் ஷகீன் பாக் போராட்டத்தை முன்னிருத்தி ஆவேசமாகப் பேசி சில கருத்துகளை வெளியிட்டனா். தேசத் துரோகிகளை என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, தொண்டா்கள் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று உணா்ச்சிவசப்பட்டு பதிலளித்துள்ளனா். மேலும் ஒரு சில தலைவா்கள் கேஜரிவால் ஒரு பயங்கரவாதி என்று வா்ணித்துவிட்டனா். இதை மக்கள் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டதாகக் கூட்டத்தில் பங்கேற்ற பெயா் குறிப்பிட விரும்பாத தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், வேட்பாளா்களைத் தோ்வு மற்றும் பெயா்களை அறிவிப்பதில் ஏற்பட்ட தாதமம், உள்ளூா் பிரமுகா்களுக்கு முக்கியத்துவம் தராமல் நட்சத்திரப் பேச்சாளா்களை குவித்தது, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய கால அவகாசம் இல்லாதது போன்றவையும் தோல்விக்கு காரணங்களாகும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ஷகீன் பாக் போராட்டத்தை இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக பா.ஜ.க.வினா் சிலா் கூறியது, போராட்டக்காரா்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என பேசியது தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று வியாழக்கிழமை கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான அமித் ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com