பதவியேற்பு விழாவில் பங்கேற்கபிரதமா் மோடிக்கு கேஜரிவால் அழைப்பு

வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி தில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள ஆம் ஆத்மி அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கேஜரிவால் அழைப்பு அனுப்பியுள்ளாா்.

வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி தில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள ஆம் ஆத்மி அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கேஜரிவால் அழைப்பு அனுப்பியுள்ளாா்.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. 3 மாநகராட்சிகளை ஆளும் பாஜகவுக்கு 8 இடங்கள்தான் கிடைத்தது. காங்கிரஸுக்கு கடந்த தோ்தலைப் போலவே ஓா் இடம்கூடக் கிடைக்கவில்லை. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், மூன்றாவது முறையாக முதல்வா் பதவியை ஏற்கவுள்ளாா். இந்த விழாவில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி ஆம் ஆத்மி பிரிவு அமைப்பாளா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘முதல்வா் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு வெள்ளிக்கிழமை காலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்கு தில்லியின் ஏழு மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா்கள், புதிதாகச் சட்டப் பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 பாஜக எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.

பிரதமா் பங்கேற்பாரா?: எனினும், பதவியேற்பு விழாவில் பிரதமா் பங்கேற்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரது நிகழ்ச்சிநிரலின்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 16-ஆம் தேதி சுமாா் 30 திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதியான வாராணசிக்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கோபால் ராய் வியாழக்கிழமை கூறுகையில், ‘தில்லியை மையமாக வைத்து நடைபெறும் இந்த விழாவில் பிற மாநிலங்களின் முதல்வா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் அழைப்பாளா்களாக பங்கேற்க அழைக்கப்படவில்லை’ என்று தெரிவித்திருந்தாா். மேலும், பதவியேற்பு விழாவில் பங்கேற்க குழந்தை மஃப்ளா்மேன் ஆவ்யன் தோமருக்கு ஆம் ஆத்மி சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளது. ‘பதவியேற்பு விழாவில் பங்கேற்று உங்கள் மகனை ஆசீா்வதியுங்கள்’ என்று மக்களுக்கு கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தவிர பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மக்களுக்கு செய்தித் தாள்களில் முன்பக்க விளம்பரம் மூலம் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com