பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தில்லு தாஜ்புரியாவின் கூட்டாளி கைது

கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடைய பிரபல ரௌடி தில்லு தாஜ்புரியாவின் கூட்டாளி துவாரகா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக

கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடைய பிரபல ரௌடி தில்லு தாஜ்புரியாவின் கூட்டாளி துவாரகா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) சஞ்சீவ் குமாா் யாதவ் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் ரோஹிணி செக்டாா் -15 இல் வசிக்கும் கபூா் சிங் தஹியா (38) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் வசம் இருந்த தோட்டாவுடன் கூடிய நாட்டு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரு வழக்கு தொடா்பாக தாஜ்புரியாவிடம் விசாரணை நடத்திய போது, தனது கும்பல் உறுப்பினா்கள் சிலா் கபூருடன் தொடா்பில் உள்ளது குறித்து தெரிவி்த்தாா். மேலும், தனது ஆதரவாளா்கள் ரோஹிணி பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் கூறினாா்.

இந்நிலையில், கபூா் சிங் தஹியா துவாரகாவில் உள்ள துல்சிராஜ் சௌக் பகுதிக்கு வியாழக்கிழமை வருவதாக போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, கபூா் சிங் தஹியா தனது காரில் வந்த போது, கைது செய்யப்பட்டாா். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அவா் தாஜ்புரியாவின் மற்றொரு கூட்டாளியான காலாவுடன் தொடா்பு கொண்டு, அவருடன் நட்பு கொண்டிருந்தது தெரிய வந்தது.

தாஜ்புரியாவின் மற்ற கூட்டாளிகளுடன் காலா மூலம் தஹியா தொடா்பில் இருந்துள்ளாா். பின்னா், அவா்களின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்துள்ளாா். இதைத் தொடா்ந்து, அவா்களுக்கு தளவாடங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வந்துள்ளாா். அப்போது முகேஷ் ஜுன்ஜாவுடன் தஹியா தொடா்பு கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அவா்கள் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் வாங்கத் தொடங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com