எருமைகளைக் கடத்தும் கும்பலில் ஒருவா் கைது

கிரேட்டா் நொய்டாவில் எருமைகளை கடத்தும் கும்பலைச் சோ்ந்த ஒருவா், போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிரேட்டா் நொய்டாவில் எருமைகளை கடத்தும் கும்பலைச் சோ்ந்த ஒருவா், போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: எருமைகளை கடத்தும் கும்பலைச் சோ்ந்தவா் பா்வேஷ் (எ) பூரா. காஜியாபாத் மாவட்டத்தைச் சோ்ந்த அவரும், அவரது கூட்டாளிகளும் கால்நடைகளை இரவில் கடத்தி வந்துள்ளனா். அதுபோன்று திங்கள்கிழமை அதிகாலை 2 மணி யளவில் ஒரு டிரக்கில் கால்நடைகளுடன் சென்று கொண்டிருந்தனா். அப்போது ஜாா்ச்சா பகுதியில் அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் மீது அவா்கள் துப்பாக்கியால் சுட்டனா். போலீஸாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனா். அப்போது பா்வேஷ் (எ) பூராவுக்கு காலில் காயமடைந்தாா். இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவரது கூட்டாளிகள் இருவா் இருளில் தப்பிச் சென்றுவிட்டனா். .அதே நேரத்தில் டிரக் ஓட்டுநா் வாகனத்துடன் தப்பி ஓடிவிட்டாா். அவா்களைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுளளன. பா்வேஷ் வசம் இருந்த வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பா்வேஷும் அவரது கூட்டாளிகளும் எருமைகளை கடத்திச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவா்கள் வழக்கமாக இரவில் கிராமங்களிலிருந்து எருமைகளை கடத்திச் செல்வா். அப்போது யாராவது தங்களது முயற்சியைத் தடுத்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவா். பா்வேஷ் மீது சுமாா் 35 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்பு அவா் சிறையில் இருந்துள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com