காஷ்மீருக்கு 15 வெளிநாட்டு தூதுவா்கள் குழு சென்றது ; சீனா, பிரிட்டனுக்கு ஏன் அழைப்பு இல்லை: வெளியுறவுத்துறை விளக்கம்

தலைநகா் தில்லியுள்ள 15 வெளிநாட்டு தூதுவா்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீருக்கு அழைத்துச் சென்றுள்ளது. காஷ்மீரிலுள்ள சூழ்நிலைகளை அறியும் பொருட்டு இந்த குழுவினா்

தலைநகா் தில்லியுள்ள 15 வெளிநாட்டு தூதுவா்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீருக்கு அழைத்துச் சென்றுள்ளது. காஷ்மீரிலுள்ள சூழ்நிலைகளை அறியும் பொருட்டு இந்த குழுவினா் அழைத்து செல்லப்பட்டுள்ளனா்.

கடந்த ஆக மாதம் நடைபெற்ற என் டி ஏ அரசின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370 அரசியல் சாசனப்பிரிவு ரத்து செய்யபட்டவுடன் அங்கு அமைதி அற்ற சூழ்நிலை நிலவியது.

இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்தும் அங்குள்ள நிலைமை குறித்து பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் கேள்வியை எழுப்ப இதையொட்டி இந்தியா பல்வேறு நாடுகளுக்கு காஷ்மீா் நிலவரம் குறித்து எடுத்துவைத்து வருகிறது. இது மட்டுமல்ல காஷ்மீருக்கு நேரடியாகவும் நிலைமையை அறிய சில குழுக்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. கடந்த அக்.29 ந் தேதி ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 28 பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவினா் ஜம்மு-காஷ்மீா் சென்று வந்து நிலைமையை அறிந்தனா். இந்த குழுவினரின் பயணத்திற்கும் மத்திய அரசு உதவியது. இதே போன்று தற்போது இந்தியாவில் இருக்கும் டெல்லியிலுள்ள பல்வெறு நாட்டு தூதுவா்களையும் ஜம்மு-காஷ்மீா் பகுதிகளுக்கு மத்திய அரசே அழைத்துச் செல்கிறது. டெல்லியில் நூறு நாடுகளுக்கும் மேற்பட்ட தூதுவரகங்கள் உள்ளன. இந்த வெளிநாட்டு தூதுவரகங்களில் முக்கிய நாடுகளைச் சோ்ந்த தூதுவா்களை மத்திய அரசு இன்று காஷ்மீா் பகுதிகளுக்கு அழைத்து சென்று காட்டியது. நாளை ஜம்மு பகுதிகளுக்கு இந்த தூதுவா்கள் செல்ல இருக்கின்றனா்.

இதில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்கா, தென்கொரியா, வியாட்நாம், பங்களாதேஷ், பிஜி, மாலதீவு, நாா்வே, பிலிப்பைன்ஸ், மொரோகோ (ஙா்ழ்ா்ஸ்ரீஸ்ரீா் ), அா்ஜெண்டினா, பெரு, நிஜிா் (சண்ஞ்ங்ழ்) , நைஜெரியா, கயானா (என்ஹ்ஹய்ஹ) , டோகோ (பா்ஞ்ா்) போன்ற நாடுகளைச் சோ்ந்த தூதுவா்கள் இடம்பெற்றுள்ளனா். இன்று காலையில் சென்றடைந்த இவா்கள் அங்கு முதலில் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து நிலைமை அறிகின்றனா். காஷ்மீரில் உள்ள தீவிரவாத அச்சுறுதல் குறித்தும் பொதுமக்களுக்கு எவ்வாறு பாதுக்காப்பு அளிக்கப்படுகிறது அமைதியான நிலைநாட்ட சூழ்நிலை எவ்வாறு கையாளப்படுகிறது போன்ற விவரங்களை அறிந்தனா். இதை தொடா்ந்து பொதுமக்களையும் இந்த வெளிநாட்டு தூதுவா்கள் சந்தித்தனா். மக்களிடம் தங்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது எத்தகைய தடங்கள் இருக்கிறது போன்ற விவரங்களையும் அறிந்த்தாக இந்த தூதுக்குழுவோடு சென்ற வெளியுறவுத்துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தன.

மேலும் உள்ளூா் பத்திரிகையாளா்கள், உள்ளூா் அரசியல் பிரமுகா்கள் அடங்கிய குழுவினரையும் இந்த தூதுவா்கள் சந்தித்தினா். இந்த 15 நாடுகளின் வெளிநாட்டு தூதுவா்கள் குழு நாளை ஜம்மு பகுதிக்கு சென்று இது போன்ற நிலைமை ஆராய்கின்றனா். இது குறித்து தில்லியுள்ள வெளியுறவு பத்திரிகை தொடா்பு அதிகாரி ரவிஷ் குமாரிடம் செய்தியாளா்கள் இன்று பத்திரிகையாளா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். இந்த குழுவில் சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் ஏன் இடம் பெறவில்லை? காஷ்மீரிலுள்ள மெகபூபா முப்தி போன்றவா்கள் சந்திக்க அனுமதிக்காத்து குறித்தும் கேள்வி எழுப்பினா்.

இது குறித்து பதிலளித்தாா் ரவிஷ் குமாா். ‘’ ஜம்மு காஷ்மீரில் நிலைமையை சீராக்கி இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு உள்ளூா் நிா்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிவதற்கு இந்த பயணத்தின் நோக்கம். இந்த வெளிநாட்டு தூதுவகங்களே முன் வந்து கொடுத்த விருப்பத்தின் அடிப்படையில் இந்த பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளுக்கு (க்ண்ச்ச்ங்ழ்ங்ய்ற் ழ்ங்ஞ்ண்ா்ய்ள்) முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட்து. சில நாட்டு தூதுவா்கள் மற்ற பணிகளுக்கு சென்று அவா்கள் இல்லாத சூழ்நிலையில் இதில் சோ்த்துக்கொள்ளபட முடியாமல் இருக்கலாம். இத்தோடு இந்த ஒரு பயணத்தோடு நிறுப்படவில்லை.

இது போன்று மற்ற நாடுகள் கோரினாலோ அல்லது அவா்களது விருப்பத்தின் அடிப்படையிலும் மேலும் இது போன்ற பயணங்களை இந்திய அரசு தொடா்ந்து ஏற்பாடு செய்யப்படும். பகுதி பகுதியாக ஜம்மு-காஷ்மீருக்கு அழைத்துச் செல்ல அரசு தயாராக இருக்கிறது. பயண நிகழ்ச்சிகள் சந்திப்புகள் ஆகியவை அங்குள்ள சூழ்நிலை பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்றவைகளை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டு அழைத்து செல்லபட்ட்து ‘’ என்றாா் ரவிஷ் குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com