போதைப் பொருள், மதுபானம் கடத்தல்இருவேறு சம்பவங்களில் 5 போ் கைது

தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாதில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் சட்டவிரோதமாகப் போதைப் பொருள்கள் மற்றும் மதுபானம் கடத்தலில் ஈடுபட்டதாக மொத்தம் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

காஜியாபாத்: தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாதில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் சட்டவிரோதமாகப் போதைப் பொருள்கள் மற்றும் மதுபானம் கடத்தலில் ஈடுபட்டதாக மொத்தம் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் லோனி எல்லைப் பகுதியில் போலீஸாா் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த இருவரை வழிமறித்து சோதனையிட்டனா். அவா்களிடம் சிறிய சிறிய பைகளில் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா்களிடம் இருந்த 39.5 கிலோ எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்ட்டது. அவா்கள் மோனீஸ் மற்றும் ஃபாரூக் என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் பரேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். இருவரும் போதைப் பொருளை பரேலி மற்றும் ராய் பரேலியில் வாங்கி சட்டவிரோதமாகக் கடத்தி வந்து தேசியத் தலைநகா் வலயத்திலும் (என்சிஆா்) பஞ்சாபிலும் விநியோகித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

மற்றொரு சம்பவம்: மற்றொரு சம்பவத்தில், நந்த்கிராம் பகுதியில் இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மினி டிரக்கில் சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் அருணாச்சல பிரதேசத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுபவை எனத் தெரிய வந்தது. இதேபோன்று ட்ரோனிகா நகரில் உள்ள ஒரு பெரும் வணிக வளாகம் (மால்) அருகே மதுபானம் கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். அந்த நபா் கோரக்பூரைச் சோ்ந்த நிதேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இரண்டு சம்பவங்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com