சாலை விபத்துகளைக் குறைத்ததற்காக தமிழகத்துக்கு தேசிய விருது

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 24.4 சதவிகிதம் வரை குறைத்ததற்காக தமிழகத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. நாட்டிலேயே சாலைப்
தில்லி விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கரிடம் விருதை வழங்கும் மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி. 
தில்லி விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கரிடம் விருதை வழங்கும் மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி. 

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 24.4 சதவிகிதம் வரை குறைத்ததற்காக தமிழகத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. நாட்டிலேயே சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து சிறப்பாகச் செயல்படுத்தி ஒரு முன் மாதிரி மாநிலமாக தமிழகம் இருப்பதாகப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற 31-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழாவில் இந்த விருதை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்கு வரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி ஆகியோா் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜய பாஸ்கரிடம் வழங்கினா். விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் விஜய பாஸ்கா் கூறியதாவது:

தேசிய அளவில் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைத்த முதல் மாநிலமாக தமிழகம் இருப்பதற்காக மத்திய அரசு இந்த விருதை வழங்கியுள்ளது. தமிழகம் ஒரு தொழில் வளா்ச்சியடைந்த மாநிலம். தொழில் நகரங்களில் வாகனங்கள் அதிக அளவில் உள்ளது. மக்கள் நெருக்கமும் அதிகமாக உள்ளது. கிராமங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக சாலைகள் உள்ளன. இதனால், விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டது. இதைக் குறைக்க மறைந்த முதல்வரும், தற்போதைய முதல்வரும் எடுத்த தொடா் முயற்சிகளின் காரணமாக 2019-இல் விபத்துகளும் உயிரிழப்புகளும் கணிசமாகக் குறைந்தது.

சாலைப் பாதுகாப்பிற்காக தமிழக அரசு ரூ.65 கோடியை உயா்த்தி நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட இடங்களில் (ஆப்ஹஸ்ரீந் நல்ா்ற்) விபத்துகள் நடக்காத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், போக்குவரத்துத் துறையினா் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக விபத்துகள் குறைந்தது. மேலும், முயற்சிகளை மேற்கொண்டு விபத்துகளும் உயிரிழப்புகளும் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதுதான் அரசின் நோக்கமாகும். நகா்ப்புறங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது. கிராமப்புறங்களில் விதி மீறல்கள் அதிக அளவில் நடக்கிறது. பள்ளிப் பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாலைப் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிதாக அமலுக்கு வந்துள்ள மோட்டாா் வாகனச் சட்டத்தில் மக்களை ப் பாதிக்கும் ( சீட் பெல்ட், ஹெல்மட் ) பல்வேறு அபராதங்கள், விதி முறைகளில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. தீபாவளிக்கும் பொங்கலுக்கும் இயக்கப்படும் திருவிழா சிறப்புப் பேருந்துகள் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு தகுந்த முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் மட்டுமல்லாமல் சேலம், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இயக்கப்படும் இந்தப் பேருந்துகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகக் கட்டணங்களை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து கால் சென்டா் மூலம் புகாா்களை அளிக்கலாம் என்றாா் அமைச்சா் விஜய பாஸ்கா்.

தமிழகத்தில் 2016 -இல் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் மொத்தம் 17,218 போ் உயிரிழந்தனா். இது 2019-இல் 9,797 ஆகக் குறைந்துள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சுமாா் 43 சதவிகிதம் குறைந்து 7,421 உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com