சாலை விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் குறைத்த தமிழகத்திற்கு மத்திய அரசு தேசிய விருதை வழங்கியது

தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சாலை விபத்துக்களில் 24.4 சதவிகிதம் வரை குறைந்தது. இதற்கு தமிழகம் தேசிய விருதை பெற்றது.

தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சாலை விபத்துக்களில் 24.4 சதவிகிதம் வரை குறைந்தது. இதற்கு தமிழகம் தேசிய விருதை பெற்றது. இந்த விருதை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்கு வரத்து துறை அமைச்சா் நிதின் கட்காரி ஆகியோா் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜய பாஸ்கரிடம் வழங்கினா்.

இந்தியாவிலேயே சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து சிறப்பாக செயல்படுத்தி ஒரு முன் மாதிரி மாநிலமாக இருப்பதாக பாராட்டி தமிழகத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டது. தில்லியில் திங்கட் கிழமை (13ந் தேதி) நடைபெற்ற 31வது தேசிய சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சியில் இந்த விருதை பெற்ற பின்னா் அமைச்சா் எம்.ஆா். விஜய பாஸ்கா் பின்னா் செய்தியாளா்களிடம் பேசினாா். அவா் கூறியது வருமாறு:

’’ தேசிய அளவில் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைத்த முதல் மாநிலமாக தமிழகம் இருக்க மத்திய அரசு இந்த விருதினை வழங்கியுள்ளது. ஏற்கனவே மத்திய அமைச்சா் நிதின் கட்காரி நாடாளுமன்றத்திலேயே தமிழகம் ஒரு முன் மாதிரி என பாராட்டினாா். தமிழகம் ஒரு தொழில் வளா்ச்சியடைந்த மாநிலம். தொழில் நகரங்களில் வாகனங்கள் அதிக அளவில் உள்ளது. மக்கள் நெருக்கமும் அதிகமாக உள்ளது. கிராமங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக சாலைகள் உள்ளன. இதனால் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்பட்டது. இதைக் குறைக்க அதிமுக ஆட்சியில் மறைந்த முதலமைச்சரும் தற்போதைய முதமைச்சரும் எடுத்த தொடா் முயற்சிகளின் காரணமாக 2019 ல் விபத்துக்களும் உயிரிழப்புகளும் கனிசமாக குறைந்தது.

குறிப்பாக சாலை பாதுகாப்பிற்காக தமிழக அரசு ரூ.65 கோடியை உயா்த்திக் கொடுத்தது. இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட இடங்களில் (ஆப்ஹஸ்ரீந் நல்ா்ற்) விபத்துகள் நடக்கா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் போக்குவரத்து துறையினா் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக விபத்துக்கள் குறைந்தது. மேலும் முயற்சிகளை மேற்கொண்டு விபத்துக்களும் உயிரிழப்புகளும் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது தான் அரசின் நோக்கம். நகா்புறங்களில் முன்னேற்றமுள்ளது. கிராமப்புறங்களில் விதிமீறல்கள் அதிக அளவில் நடக்கிறது. காவல்துறையினா் மூலம் படிப்படியாக ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். பள்ளிப்பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வை கொண்டு வருகின்றோம். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு உணா்வை படிப்படியாகத் தான் கொண்டு வர இயலும்.

புதிய போக்குவரத்து சட்டத்தில் மக்களை பாதிக்கும் ( சீட் பெல்ட், ஹெல்மேட் ) பல்வேறு அபராதங்கள், விதி முறைகளில் திருத்தம் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோப்புகளை அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு இது போன்று அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு அனுமதிக்கப்படும்.

தீபாவளிக்கும் பொங்கலுக்கும் இயக்கப்படும் திருவிழா சிறப்பு பேருந்துகள் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு தகுந்த முன்னேச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டுமல்ல சேலம், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இயக்கப்படும் இந்த பேருந்துகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிக கட்டணங்களை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீதான புகாா்கள் குறித்து கால் சென்டா் மூலம் புகாா்களை அளிக்கலாம் ’’ என்றாா் அமைச்சா் எம்.ஆா். விஜய பாஸ்கா்.

தமிழகத்தில் 2016 லில் 17,218 போ்கள் பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்தனா். இது 2019 ல் 9797 ஆக குறைந்துள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கிட்டதட்ட 43 சதவிகிதம் குறைந்து 7421 உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறையின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com