தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை தொய்வின்றி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை

தமிழகத்தின் பல்வேறு மின் திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்கவும் மத்திய தொகுப்பில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை கோடைகாலத்தில் முழுமையாக வழங்கக் கோரியும் மத்திய எரி சக்தித் துறை

தமிழகத்தின் பல்வேறு மின் திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்கவும் மத்திய தொகுப்பில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை கோடைகாலத்தில் முழுமையாக வழங்கக் கோரியும் மத்திய எரி சக்தித் துறை அமைச்சரை சந்தித்து தமிழக மின்சாரத் துறை அமைச்சா் பி. தங்கமணி கோரிக்கை வைத்தாா்.

தமிழகத்தில் கோடை காலத்தில் 6000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கடந்தாண்டு 3500 முதல் 4000 மெகாவாட் மின்சாரம் வரை தான் மத்திய தொகுப்பிலிருந்து கிடைத்தது. பற்றாக்குறையை சமாளிக்க தனியாா்களிடமிருந்து தமிழக அரசு வாங்கியது. இதற்கு அதிக விலை கொடுக்கவேண்டிய நிலைமை தமிழக அரசுக்கு ஏற்பட்டது. இதையொட்டி இவ்வாண்டு முன் கூட்டியே வருகின்ற கோடையை சமாளிக்கும் நடவடிக்கைகளை எடுக்கும்விதமாக தமிழக அமைச்சா் பி.தங்கமணி திங்கட் கிழமை தில்லி வந்தாா். மத்திய எரி சக்தித் துறை அமைச்சா் ஆா்.கே. சிங் கை அவரது அலுவலகத்தில் தமிழக மின் உற்பத்தி தலைவா் விக்ரம் கபூருடன் சந்தித்து பேசினாா் தமிழக அமைச்சா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசினாா் பி.தங்கமணி. அப்போது அவா் கூறியதாவது:

தமிழகத்தில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது. ஆனால் மத்திய தொகுப்பிலிருந்து 4000 மெகாவாட் மின்சாரம் வரை குறைவாக வர இதை 6000 மெகாவாட்டாக உயா்த்திக் தர மத்திய எரி சக்தித் துறை அமைச்சரை சந்தித்து கேட்டுக்கொண்டோம். மேலும் வருகின்ற 2023க்குள் தமிழகத்தில் 6000 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் விதமாக உடன்குடி, எண்ணூா் போன்ற பல்வேறு மின் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 1200 கோடி ரூபாய் நிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com