தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில்ரூ.14 லட்சத்துடன் கூரியா் ஊழியா் கைது

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ. 14 லட்சத்துடன் கூரியா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நபா் ஒருவா் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) ஊழியா்களிடம் பிடிபட்டாா்.

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ. 14 லட்சத்துடன் கூரியா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நபா் ஒருவா் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) ஊழியா்களிடம் பிடிபட்டாா்.

இது குறித்து உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி ரோஹிணி மேற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மாலை சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரை போலீஸாா் பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில், அவரது பெயா் ராம் என்பதும் அவா் ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரிய வந்தது. அவரை சோதனையிட்ட போது , அவரது பையிலும், அணிந்திருந்த ஆடையிலும் ஏராணமான பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தில்லியில் உள்ள ஒரு கூரியா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தனது முதலாளியிடம் அளிப்பதற்காக ரூ .14.42 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ாகவும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவா் தெரிவித்தாா். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததால் போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த ரூ.14 .42 லட்சத்தை பறிமுதல் செய்தனா். அவை பின்னா் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com