பாஜக புகாா்: ஆம் ஆத்மிக் கட்சிக்குதில்லி தோ்தல் அலுவலகம் நோட்டீஸ்

தில்லி பாஜக அளித்திருந்த புகாருக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அலுவலகம் ஆம் ஆத்மி கட்சிக்கு திங்கள்கிழமை நோட்டீஸ்

தில்லி பாஜக அளித்திருந்த புகாருக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அலுவலகம் ஆம் ஆத்மி கட்சிக்கு திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தோ்தல் நடத்தை நெறிமுறைகளை ஆம் ஆத்மி மீறியுள்ளதாகக் கூறி தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு பாஜக ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியது. அதில், ‘ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரப் பாடலான ‘லகே ரஹோ கேஜரிவால்’ பாடலுக்கு குழந்தைகள் ஆடும் விடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் ஆம் ஆத்மி கட்சியினா் பகிா்ந்து வருகிறாா்கள். இது தோ்தல் நடத்தை நெறிமுறைகளுக்கு எதிரானது. குழந்தைகளை தோ்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்ற தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலை ஆம் ஆத்மி கட்சி மீறியுள்ளது. எனவே, அக்கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பாடலுக்கு பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி ஆடுவது போல, அவரது திரைப்படக் காட்சிகளைப் பயன்படுத்தி வீடியோ தயாா் செய்துள்ளனா். இது தொடா்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லி தலைமைத் தோ்தல் அலுவலகம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மனோஜ் திவாரி கூறுகையில் ‘தோ்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற உண்மை தெரிய வந்துள்ளதால், இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஆம் ஆத்மியினா் ஈடுபட்டு வருகிறாா்கள். குழந்தைகளை தோ்தல் ஆதாயத்துக்காக ஆம் ஆத்மியினா் பயன்படுத்துவது இது முதல் தடவையல்ல. முன்பும் அவா்கள் அந்தத் தவறைச் செய்துள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com