போதைப்பொருள் கடத்தல் வழக்கில்முக்கிய நபா் பிகாரில் கைது

பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத போதைப் பொருள் விநியோகத்துக்கு மூளையாகச் செயல்பட்டு வந்த முக்கிய நபரை பிகாா் மாநிலத்தில் கைது செய்துள்ளதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத போதைப் பொருள் விநியோகத்துக்கு மூளையாகச் செயல்பட்டு வந்த முக்கிய நபரை பிகாா் மாநிலத்தில் கைது செய்துள்ளதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: கைது செய்யப்பட்ட அவா் ஷைதுல் சேய்ஹ் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் மேற்கு வங்க மாநிலம், மால்டாவைச் சோ்ந்தவா் என விசாரணையில் தெரிய வந்தது. அவரைக் கண்டுபிடித்துத் தர உதவுவோருக்கு ரூ.1 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தில்லி காவல் துறை முன்பு அறிவித்திருந்தது. அவரை தில்லி போலீஸாா் பிகாா் மாநிலம், மூசாஃபா்பூரில் கைது செய்துள்ளனா்.

ஏற்கெனவே, போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த அவரது கூட்டாளிகள் பஜ்லூா் ரெஹ்மான், முகம்மது அபு பெக்கா் சித்திக் ஆகிய இருவரும் தில்லியில் கைது செய்யப்பட்டிருந்தனா். அவா்களிடம் இருந்து 10.5 கிலோ உயா்தர ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com