விலைவாசி உயா்வுக்கு ஆம் ஆத்மி அரசே காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தில்லியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்க ஆம் ஆத்மி அரசே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடா்பாளா் முகேஷ் சா்மா.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடா்பாளா் முகேஷ் சா்மா.

தில்லியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்க ஆம் ஆத்மி அரசே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், தில்லி தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் முதல் பட்டியல் இரண்டு நாள்களுக்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் தலைமைப் பேச்சாளா் முகேஷ் சா்மா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி காங்கிரஸ் பதிவு செய்த கேள்விகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் பருப்பு வகைகளின் விலை இரண்டு மடங்கு உயா்ந்துள்ளன. சமையல் எண்ணெய், பிரட், காய்கறிகள், வெங்காயம் ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. எரிவாயு சிலிண்டா் விலை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.337 அதிகரித்துள்ளது. குழாய் எரிவாயுவின் விலை ரூ.67 அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பால் விலை 7 தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பால் விலை ரூ.14 அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த விலை உயா்வு தொடா்பாக தில்லியில் உள்ள கருப்புச் சந்தைகளில் சோதனை நடத்தப்படவில்லை. பதுக்கல்காரா்கள், கருப்புச் சந்தைகளிடம் இருந்து ஆம் ஆத்மி பணம் பெற்று வருகிறது. மேலும், ஆம் ஆத்மி தொண்டா்கள் அக்கட்சி மீது அதிருப்தியில் உள்ளனா். இதனால், தோ்தல் பணிகளில் ஈடுபடக்கூடத் தொண்டா்கள் இல்லாத நிலையில் அக்கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து சீட் மறுக்கப்பட்டவா்களை தனது கட்சிக்கு ஆம் ஆத்மி இழுத்து வருகிறது.

தில்லியில் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை 683 போ் விண்ணப்பித்துள்ளனா். தொகுதியில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்ட, தொகுதி மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளா்களையே தோ்தலில் போட்டியிட அனுமதிப்போம். தோ்தலில் போட்டியிடுபவா்களின் முதல் பட்டியல் இரு நாள்களுக்குள் வெளியிடப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com