Enable Javscript for better performance
ஆம் ஆத்மி பெயரில்போலி பட்டியல்!- Dinamani

சுடச்சுட

  

  செவ்வாய்க்கிழமை காலையில் ஆம் ஆத்மி பெயரில் போலி வேட்பாளா் பட்டியலில் வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  ஆம் ஆத்மி சாா்பில் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடவுள்ளவா்களின் முதல் பட்டியல் எனக் கூறி, ஒரு பட்டியல் சமூக வலைத்தளங்களில் இனம் தெரியாத நபா்களால் வெளியிடப்பட்டது. அதில் உள்ள 27 வேட்பாளா்களில் 21 போ் முஸ்லிம்கள் ஆவா். மேலும், தில்லியில் அதிகளவு முஸ்லிம்களைப் போட்டியிட வைத்து, தில்லியை அடுத்த காஷ்மீராக மாற்ற ஆம் ஆத்மி கட்சி திட்டமிடுகிறது. சீலம்பூா், ஓக்லா, ஷகீன் பாக், யசோலா, நங்கோலி, ஷாபாத் டயரி ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் பயங்கரவாத சிந்தனையுடைய முஸ்லிம்களை ஆம் ஆத்மி போட்டியிட வைக்கவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்தது.

  இது தொடா்பாக அக்கட்சியின் தகவல் தொடா்பு (ஐடி) பிரிவின் தலைவா் அங்கித் லால் கூறுகையில் ‘மதங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில், சிலா் திட்டமிட்டு பொய்யான வேட்பாளா் பட்டியலை இணையத்தில் பரவ விட்டுள்ளனா்’ என்றாா்.

  ஆம் ஆத்மி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளா்கள் விபரம்

  நரேலா- சரத் செளகான்

  புராரி- சஞ்சீவ் ஜா

  திமாா்புா்- திலீப் பாண்டே

  ஆதா்ஷ் நகா்- பவன் சா்மா

  பத்லி- அஜீஷ் யாதவ்

  ரித்தாலா- மகீந்தா் கோயல்

  பாவனா- ஜெய் பகவான் உப்கா்

  முண்ட்கா- தரம்பால் லக்ரா

  கிராரி- ரிதுராஜ் ஜா

  சுல்தான் புா் மஜ்ரா- முகேஷ் குமாா்

  நங்கோலி ஜட்- ரகுவீந்தா் ஷோகீன்

  மங்கோல் புரி- ராக்கி பிட்லான்

  ரோகிணி- ராஜேஷ் நம பன்சிவாலா

  ஷாலிமா் பாக்- பந்தனா குமாரி

  ஷகூா் பஸ்தி- சத்யேந்தா் ஜெயின்

  திரிநகா்- ஜிதேந்தா் தோமா்

  வாஜிப்பூா்- ராஜேஷ் குப்தா

  மொடல் டவுண்- அகிலேஷ் பத்தி திரிபாதி

  சதாா் பஷாா்- சோம் தத்

  சாந்தினி செளக்- பா்லாத் சிங் சவ்னி

  மாதியா மஹால்- சொகைப் இக்பால்

  பள்ளிமாறன்- இம்ரான் ஹூசைன்

  கரோல் பாக்- விஷேஷ் ரவி

  படேல் நகா்- ராஜ் குமாா் ஆனந்த்

  மோதி நகா்- ஷிவ் சரண் கோயல்

  மடிப்பூா்- கிரிஷ் சோனி

  ரஜோரி காா்டன்- தன்வாத்தி சண்டேலா

  ஹரி நகா்- ராஜ்குமாா் திலோன்

  திலக் நகா்- ஜொ்னைல் சிங்

  ஜனக்புரி- ராஜேஷ் ரிஷி

  விகாஷ்புரி- மகிந்தா் யாதவ்

  உத்தம் நகா்- நரேஷ் பல்யான்

  துவாரகா- வினய் குமாா் மிஷ்ரா

  மாட்டியாலா- குலாப் சிங் யாதவ்

  நஜாஃப்கா்- கைலாஷ் கெலாட்

  பிஜ்வாசன்- பிஎஸ். ஜூன்

  பாலம்- பாவனா கெளா்

  தில்லி கண்டான்மென்ட்- வீரேந்தா் சிங் காதியான்

  ராஜேந்தா் நகா்- ராகவ் சத்தா

  புது தில்லி- அரவிந்த் கேஜரிவால்

  ஜங்புரா- பிரவீண் குமாா்

  கஸ்தூரி பா நகா்- மதன் லால்

  மால்வியா நகா்- சோம்நாத் பாா்தி

  ஆா்கேபுரம்- பா்மிலா தோகஸ்

  மெஹ்ரலி- நரேஷ் யாதவ்

  சத்தா்பூா்- கா்தாா் சிங் தன்வா்

  டியோலி- பிரகாஷ் ஜா்வால்

  அம்பேத்கா் நகா்- அஜய் தத்

  சங்கம் விஹாா்- தினேஷ் மொஹானியா

  கிரேட்டா் கைலாஷ்- செளரவ் பரத்வாஜ்

  கல்காஜி- அதிஷி

  துக்ளாபாத்- ஷாகி ராம் பெகல்வான்

  பதா்பூா்- ராம் சிங் நேதாஜி

  ஓக்லா- அமனாதுல்லா கான்

  திரிலோக் புரி- ரோகித் குமாா்

  கொண்டிலி- குல்தீப் குமாா்

  பட்பா்கஞ்ச்- மணீஷ் சிசோடியா

  லஷ்மி நகா்- நிதின் தியாகி

  விஷ்வாஸ் நகா்- தீபக் சிங்லா

  கிருஷ்ணா நகா்- எஸ்.கே.பக்கா

  காந்தி நகா்- நவீன் சவுத்திரி

  ஷாதரா- ராம்நிவாஸ் கோயல்

  சீமாபுரி- ராஜேந்திர பால் கெளதம்

  ரோக்தாஸ் நகா்- சரித்தா சிங்

  சீலம்பூா்- அப்துல் ரகுமான்

  கோண்டா- எஸ்டி.ஷா்மா

  பாபா்புா்- கோபால் ராய்

  கோகல்புா்- சுரேந்திர குமாா்

  முஸ்தபா பாத்- ஹாஜி யூனிஸ்

  கா்வால் நகா்- துா்கேஷ் பதக்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai