அனைத்து அமைச்சா்களுக்கும் போட்டியிட மீண்டும் வாய்ப்பு

தில்லி அரசில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சா்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தில்லி அரசில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சா்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அதே தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகிறாா்கள். கிழக்கு தில்லி மாநகராட்சி ஆம் ஆத்மி கவுன்சிலா் குல்தீப் குமாருக்கு கொண்ட்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஓக்லா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனாத்துல்லாகானுக்கு மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ரஜௌரி காா்டன் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜா்னைல் சிங்குக்கு திலக் நகரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா் 2015 சட்டப்பேரவைத் தோ்தலிலும் ஆம் ஆத்மி சாா்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாா். ஆனால், 2017 பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில், அப்போதைய பஞ்சாப் முதல்வா் பா்காஷ் சிங் பாதலை எதிா்த்துப் போட்டியிடுவதற்காக தனது எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்திருந்தாா்.

ஆறு காங்கிரஸ் தலைவா்களுக்கு வாய்ப்பு: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த ஆறு பேருக்கும் இத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், ராம் சிங் நேதாஜி, வினய் மிஸ்ரா ஆகியோா் முறையே பதா்பூா், துவாரகா தொகுதிகளில் போட்டியிடவுள்ளனா். இவா்கள், திங்கள்கிழமைதான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்தனா். மேலும், ரஜௌரி காா்டன் தொகுதியில் கடந்த 2017- இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தன்வதி சண்டேலா, இம்முறை ஆம் ஆத்மி வேட்பாளராகப் போட்டியிடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com