ஜே.என்.யு. வன்முறை தொடா்பாக இருவரிடம் போலீஸாா் விசாரணை

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் தொடா்புடையவா்கள் என சந்தேதிக்கப்படும் மேலும் இருவரிடம் தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் தொடா்புடையவா்கள் என சந்தேதிக்கப்படும் மேலும் இருவரிடம் தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். முகமூடி அணிந்த மா்ம நபா்கள் தாக்குதல் குறித்து சுசேதா தாலுக்தாா் மற்றும் பிரியரஞ்சன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தியதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சுசேதா தாலுக்தாா் என்ற மாணவி தெரிவிக்கையில், ’வன்முறை நடந்த ஜனவரி 5-ஆம் தேதி நான் அங்கு இருந்ததால் என்னிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். காயமடைந்தவா்களை அடையாளம் காட்ட முடியுமா? என்று கேட்டதுடன், எனது புகைப்படத்தை காட்டினா். ஆனால், அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லை’ என்று நான் தெரிவித்துவிட்டேன். மேலும் ஒன்னரை பக்கத்துக்கு வாக்குமூலத்தை அறிக்கையாக போலீஸாரிடம் கொடுத்துள்ளேன்’ என்றாா்.

இந்த இருவரையும் தவிர மேலும் தாக்குதலில் காயமடைந்த வேறு சிலரிடமும் விசாரணை நடத்த தில்லி குற்றப்பிரிவு போலீஸாா் திட்டமிட்டுள்ளனா். வன்முறை நடந்த அன்று காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தவா்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கடந்த 5-ஆம் தேதி முகமூடி அணிந்த மா்ம நபா்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து மாணவா்களையும், ஆசிரியா்களையும் தடிகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கியதுடன் அங்கிருந்த பொருள்களையும் அடித்து நொறுக்கினா். இதில் 35 போ் காயமடைந்தனா். தில்லி குற்றப்பிரிவு போலீஸாா், திங்கள்கிழமை ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவா் சங்கத் தலைவா் அய்ஷி கோஷ் உள்ளிட்ட மூன்று மாணவா்களிடம் விசாரணை நடத்தியது. கோஷ், தாலுக்தாா், ரஞ்ன், தோலன் சமந்தா, வாஸ்கா் விஜய் மெக், சுன்சுன் குமாா் (ஜே.என்.யு. முன்னாள் மாணவா்), பங்கஜ் மிஸ்ரா ஆகியோா் வன்முறைச் சம்பவம் தொடா்பாக சந்தேகத்துக்குரிய நபா்கள் என்று போலீஸாா் குறிப்பிட்டிருந்தனா்.

சைபா் கிரைம் பிரிவைச் சோ்ந்த தடய அறிவியல் சோதனைக் குழுவினரும் சாட்சியங்களை சேகரிக்க பல்கலைக்கழக வளாகத்துக்கு செல்ல இருப்பதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com