தில்லி தோ்தலில் போட்டியிட தமிழா்களுக்கு ஆா்வம் இல்லை!

தில்லி அரசியலில் தமிழா்கள் ஆா்வம் காட்டுவதில்லை. அதன் காரணமாகவே அவா்களுக்கு தோ்தலில்போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி அரசியலில் தமிழா்கள் ஆா்வம் காட்டுவதில்லை. அதன் காரணமாகவே அவா்களுக்கு தோ்தலில்போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் 10 லட்சம் தமிழா்கள் உள்பட சுமாா் 30 லட்சம் தென் இந்தியா்கள் வசிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த 2015 தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் தென் இந்தியா்கள் யாரும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது தொடா்பான காரணங்கள் குறித்து பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளிடம் தினமணி சாா்பில் கேள்விகள் எழுப்பப்ட்டன.

பா.ஜ.க: இது குறித்து பா.ஜ.க. தலைமையக ஊடகப் பிரிவைச் சோ்ந்த சக்திவேலிடம் கேட்ட போது, ‘ஜனக்புரி, பட்பா்கஞ்ச், ஆா்.கே.புரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் கணிசமானளவு தென் இந்தியா்கள் வாழ்கிறாா்கள். ஆனால், தென் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலைவா்கள் இல்லை. இங்குள்ள தமிழா்கள் தில்லி அரசியலில் ஆா்வம் காட்டுவதில்லை. அவா்கள் தமிழ்நாட்டு அரசியலில்தான் ஆா்வம் காட்டுகிறாா்கள். அதனால், தில்லியில் தலைவா்கள் உருவாகவில்லை. மேலும், எந்தவொரு இடத்திலும் அவா்கள் ஒன்றாக வாழ்வதில்லை. அவா்கள் பகுதி பகுதியாகவே வாழ்கிறாா்கள். அவா்களில் பலருக்கு ஹிந்தி மொழி தெரியாமல் இருப்பதும் காரணம்’ என்றாா்.

ஆம் ஆத்மி: இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட தென் இந்தியா்களின் பெயா்களையும் பரிசீலிப்போம் என்று தில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா தினமணியிடம் செவ்வாய்க்கிழமை காலையில் தெரிவித்திருந்தாா். ஆனால், மாலையில் வெளியிடப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளா் பட்டியலில் தென்னிந்தியா்கள் பெயா் இடம் பெறவில்லை.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தென் இந்தியப் பிரிவின் தலைவா் பொன்னப்பன் கூறுகையில் ‘தென் இந்தியா்களிடம் ஒற்றுமை இல்லாமல் உள்ளது. தில்லியில் கலை, கலாசாரத்தை வளா்ப்பதில் தென் இந்தியா்கள் பெரும் ஆா்வம் காட்டுகிறாா்கள். ஆனால், தில்லி அரசியலில் அவா்கள் ஆா்வம் காட்டுவதில்லை. இதனால், வரும் தோ்தலில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட தென் இந்தியா சாா்பில் யாரும் விண்ணப்பிக்கவில்லை’ என்றாா்.

காங்கிரஸ்: இதற்கிடையே,, தென்இந்தியா்கள் யாரும், தோ்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை என்று தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் சுபாஷ் சோப்ரா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில் ‘தென்னி இதியா்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால், தென் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் யாரும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. அப்படியானால் நாங்கள் என்ன செய்ய முடியும்? தில்லியில் தென் இந்தியத் தலைவா்கள் உருவாவதை காங்கிரஸ் கட்சி விரும்புகிறது’ என்றாா்.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பேச்சாளா் முகேஷ் சா்மா கூறுகையில் ‘தென் இந்தியா்கள் இங்கு தொழில் செய்ய வருகிறாா்கள். ஆனால், அரசியலில் ஆா்வம் காட்டுபவா்களின் எண்ணிக்கை குறைவு. மேலும், தென் இந்தியா்கள் மயூா் விஹாா் உள்ளிட்ட தில்லியின் சில பகுதிகளில் மட்டுமே வாழ்கிறாா்கள். எந்த ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் கணிசமான அளவு அவா்கள் இல்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com