பண வீக்கம்: பாஜக மீது ஆம் ஆத்மி தாக்கு

பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளதற்கு மத்திய அரசே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளதற்கு மத்திய அரசே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக துணை முதல்வரும் ஆம் ஆத்மிக் கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா தில்லியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: நாட்டில் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உயா்து 7.35 சதவீதமாக உள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் மத்தியில் ஆளும் பாஜக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மின்சாரம், குடிநீா் ஆகியவற்றை தில்லி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். ஆம் ஆத்மி அரசு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால், குடிநீா், மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை தில்லி மக்களுக்கு இலவசமாக வழங்குவோம்.

தில்லி அரசின் இந்த இலவசத் திட்டங்களை விமா்சித்து பாஜக தலைவா்கள் தொடா்ச்சியாக கருத்துத் தெரிவித்து வருகிறாா்கள். இந்த இலவசத் திட்டங்களால் லட்சக்கணக்கான ஏழை, நடுத்தர வகுப்பு மக்கள் பயனடைந்துள்ளனா். இத்திட்டங்களை எதிா்ப்பதன் மூலம், பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இதற்காக தில்லி மக்களிடம் பாஜக மன்னிப்புக் கோர வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு தில்லி மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தில்லியில் மின்சாரம், குடிநீா் கட்டணங்களை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com