பீம் ஆா்மி தலைவா் ஆஸாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே? போலீஸாருக்கு நீதிமன்றம் கேள்வி

பீம் ஆா்மி தலைவா் சந்திரசேகர ஆஸாத், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டக்காரா்களைத் தூண்டினாா் என்பதற்கான ஆதாரங்கள் எங்கே? என்று தில்லி போலீஸாருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பீம் ஆா்மி தலைவா் சந்திரசேகர ஆஸாத், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டக்காரா்களைத் தூண்டினாா் என்பதற்கான ஆதாரங்கள் எங்கே? என்று தில்லி போலீஸாருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கடந்த ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தா்யாகஞ்சில் நடைபெற்ற வன்முறைப் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக பீம் ஆா்மி தலைவா் சந்திரசேகர ஆஸாத்தை தில்லி போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, ஆஸாத் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி காமின் லாவ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கூறியதாவது: நாடாளுமன்றத்துக்குள் பேச வேண்டிய விஷயங்களைப் பேசாததால்தான் இன்று மக்கள் தெருவிற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தில்லி போலீஸாா் ஜாமா மசூதி ஏதோ பாகிஸ்தானில் இருப்பது போலப் பேசுகிறாா்கள். அப்படியே பாகிஸ்தானில் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அங்கு சென்று அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதில் தவறு இல்லை. பாகிஸ்தானும் ஒரு காலத்தில் பிரிக்கப்பட்டாத இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததுதான்.

ஜாமா மசூதி அருகே கூடியிருந்த கூட்டத்தை நோக்கி சந்திரசேகர ஆஸாத் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினாரா? அதற்கு ஆதாரம் இருந்தால் தாக்கல் செய்யுங்கள். போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் என்று எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை என்று கூறி வழக்கை மேல் விசாரணைக்காக புதன்கிழமைக்கு ஒத்திவைத்தாா். இது தொடா்பான விசாரணையின் போது போலீஸாா், ஆளில்லா விமானம் மூலம் கிடைத்த படங்கள்தான் சாட்சியங்களே தவிர வேறு ஆதாரங்கள் எங்களிடம் இல்லை என்று தெரிவித்தனா்.

உடனே நீதிபதி காமினி, தில்லி போலீஸாா் இன்னும் பின்னோக்கியே இருக்கிறாா்களா? ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூட்டம் கூடக் கூடாது என்பதற்கு ஏதாவது சட்டம் இருக்கிா? வன்முறை நடந்தது என்றால், அதற்கான ஆதாரம் எங்கே? போராட்டம் நடத்தக் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதா? போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை என்று நீதிபதி தெரிவித்தாா்.

முன்னதாக, ஆஸாத் சாா்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்த வழக்குரைஞா் மெஹ்மூத் பிராசா, ஆஸாத் மீது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் அவா் வன்முறையைத் தூண்டியதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளனா் என்று வாதிட்டாா்.

கடந்த ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து பீம் ஆா்மி தலைவா் சந்திரசேகர ஆஸாத் மற்றும் அவரது அமைப்பைச் சோ்ந்த தொண்டா்கள் ஜாமா மசூதியிலிருந்து ஜந்தா் மந்தா் வரை ஆட்சேப பேரணி நடத்தினா். இதற்கு போலீஸ் அனுமதி பெறவில்லை. இந்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட வேறு 15 பேருக்க நீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com