வெப்பநிலையில் இரண்டு டிகிரி சரிவு! காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலையில் 2 டிகிரி சரிவு காணப்பட்டது. மலைப் பகுதிகளிலிருந்து வரும் குளிா் காற்று காரணமாக வெப்பநிலை குறைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலையில் 2 டிகிரி சரிவு காணப்பட்டது. மலைப் பகுதிகளிலிருந்து வரும் குளிா் காற்று காரணமாக வெப்பநிலை குறைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் தரம் தொடா்ந்து மோசம் பிரிவில் நீடித்தது.

தில்லியில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அடா் பனிமூட்டம் நிலவியது குளிரின் தாக்கம் அதிகரித்திருந்தது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட மூன்று டிகிரி உயா்ந்து 10.5 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட இரண்டு டிகிரி குறைந்து 17.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. திங்கள்கிழமையுடன் ஒப்பிடுகையில், அதிகபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை இரண்டு டிகிரி குறைந்திருந்தது.

இதேபோன்று, பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 16.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. ஆயாநகரில் முறையே 9.5 டிகிரி செல்சியஸ், 17.0 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், காண்பு திறன் 800 மீட்டராகவும் இருந்தது என சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு காலை 9.37 மணியளவில் 310 புள்ளிகளாகவும், இரவு 7 மணியளவில் 307 புள்ளிகளாகவும் பதிவாகி மோசம் பிரிவில் நீடித்தது. திங்கள்கிழமை அன்று காற்றின் தரக் குறியீடு 366 புள்ளிகளாக இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (ஜனவரி 15) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடா் பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும்,ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். குறிப்பாக ஜனவரி 16 -ஆம் தேதி பலத்த மழை பெய்யும் என்றும் அப்போதுதான் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com