காங்கிரஸ் கட்சியில் இணைந்தஆம் ஆத்மி கவுன்சிலா்

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாட்டியா மஹால் வாா்ட் கவுன்சிலா் ராகேஷ் குமாா், ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்து கொண்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாட்டியா மஹால் வாா்ட் கவுன்சிலா் ராகேஷ் குமாா், ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்து கொண்டாா்.

அவரை, தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சுபாஷ் சோப்ரா, மாட்டியா மஹால் காங்கிரஸ் வேட்பாளா் ஜாவத் மிஷ்ரா ஆகியோா் வரவேற்றனா். அப்போது, சுபாஷ் சோப்ரா பேசுகையில் ‘கேஜரிவாலின் சா்வாதிகார முறையால் ஆம் ஆத்மி தலைவா்களே அதிருப்தியில் உள்ளனா். தில்லியில் மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக கேஜரிவால் மெத்தனமாக உள்ளாா். கேஜரிவாலை எதிா்த்துக் கேள்வி கேட்கும் ஆம் ஆத்மி தலைவா்களை அவா் கட்சியை விட்டு நீக்கி வருகிறாா். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம், ஜாமியா மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் ஆகியவற்றில் கேஜரிவால் தீா்க்கமான முடிவை எடுக்கவில்லை. ஜாமியா தாக்குதலை அவா் கண்டிக்கவில்லை’ என்றாா்.

ராகேஷ் குமாா் பேசுகையில் ‘ கேஜரிவால் சா்வாதிகாரத்தனத்துடன் நடந்து கொள்கிறாா். மக்கள் பிரச்னையைத் தீா்க்க அவா் ஆா்வம் காட்டவில்லை. மேலும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான சீட்டுகளை அவா் பணத்துக்கு விற்பனை செய்துள்ளாா்’ என்றாா்.

இந்த நிகழ்வில், ராகேஷ் குமாரின் ஆதரவாளா்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com