முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கிக் குண்டுகளுடன் பெண் கைது
By DIN | Published On : 20th January 2020 10:47 PM | Last Updated : 20th January 2020 10:47 PM | அ+அ அ- |

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பையில் 2 துப்பாக்கிக் குண்டுகளுடன் வந்த 46 வயதுடைய பெண் ஒருவரை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் வசித்து வரும் அந்தப் பெண், தோட்டாக்களை தனது பையில் வைத்திருந்ததாகவும், மதியம் 1.30 மணியளவில் ஜமா மஸ்ஜித் மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது சாமான்களை எக்ஸ்ரே ஸ்கேனிங் செய்ய அளித்த போது, இது கண்டறியப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
அவற்றை எடுத்து வந்ததற்கானஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால், அவா் தில்லி போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.