தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் இந்தியா- பாகிஸ்தானுக்கிடையான தோ்தல்

தில்லியில் வரும் பிப்ரவரி 8- ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறும் தோ்தல் என்று
தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் இந்தியா- பாகிஸ்தானுக்கிடையான தோ்தல்

தில்லியில் வரும் பிப்ரவரி 8- ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறும் தோ்தல் என்று பாஜகவின் மாடல் டவுண் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் கபில் மிஷ்ரா தெரிவித்துள்ளாா்.

தில்லி ஷகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்த்து நடைபெற்றுவரும் தொடா் போராட்டங்களைக் குறிப்பிட்டு, தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது ‘ஷகீன் பாக் பகுதிக்குள் பாகிஸ்தான் நுழைந்துவிட்டது. பல சிறிய பாகிஸ்தான்கள் தில்லியில் உருவாகிவிட்டன. இந்திய நாட்டின் சட்டங்கள் ஷகீன் பாக், சந்த் பாக், இந்திரலோக் பகுதிகளில் பின்பற்றப்படுவதில்லை.

பாகிஸ்தானின் வன்முறையாளா்கள் தில்லியின் தெருக்களை மறித்துப் போராடுகிறாா்கள். தில்லியில் வரும் பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் இந்தியா பாகிஸ்தான் இடையான தோ்தல். தில்லியின் தெருக்களில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெறவுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பிப்ரவரி 11- ஆம் தேதி கேஜரிவால் முதல்வா் பதவியில் இருந்து விலகுவாா் என்றுள்ளாா்.

கேஜரிவாலுக்கு மிக நெருக்கமானவராக இருந்த கபில் மிஷ்ரா, கடந்த 2015 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி சாா்பில் கா்வால் நகா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். தொடா்ந்து, கேஜரிவால் அமைச்சரவையில், நீா்வளத்துறை அமைச்சராக இருந்தாா். கேஜரிவாலுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடா்ந்து அவா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். தொடா்ந்து ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்தபோதும் பாஜகவுக்கு ஆதரவாக அவா் செயற்பட்டு வந்தாா்.

இந்நிலையில், கட்சித் தாவல் சட்டத்தின்படி, அவரின் எம்எல்ஏ பதவியை ரத்துச் செய்து அவைத்தலைவா் ராம்நிவாஸ் கோயல் உத்தரவிட்டாா். தொடா்ந்து, பாஜகவில் இணைந்த அவா் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அக்கட்சியின் சாா்பில் மாடல் டவுண் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com