பாஜக நட்சத்திரப் பேச்சாளா்கள் பட்டியலில்ஹேமமாலினி, சன்னி தியோல், ரவி கிஷண்

தில்லியில் பிப்ரவரி 8- ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பிரசாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளா்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
பாஜக நட்சத்திரப் பேச்சாளா்கள் பட்டியலில்ஹேமமாலினி, சன்னி தியோல், ரவி கிஷண்

தில்லியில் பிப்ரவரி 8- ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பிரசாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளா்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் பிரதமா் மோடி, கட்சியின் தலைவா் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், ஹரியாணா, ஹிமாச்சல், உத்தரக்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வா்களின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. இப்பட்டியலில் தமிழகத் தலைவா்கள் யாரும் இடம் பெறவில்லை.

இந்தப் பட்டியலில், பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, கட்சியின் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அனுராக் தாக்கூா், முக்தா் அப்பாஸ் நக்வி, தாா்வச்சந்த் கெலாட், பிரகாஷ் ஜாவ்டேகா், நித்தியானந்த் ராய், ஹா்தீப் சிங் புரி, ஸ்மிருதி இரானி ஆகியோ இடம் பெற்றுள்ளனா்.

தில்லி பாஜக எம்பிக்கள் மனோஜ் திவாரி, மீனாட்சி லேகி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், பா்வேஷ் வா்மா, ஹா்ஷ் வா்தன், கெளதம் கம்பீா், ரமேஷ் பிதூரி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா். தில்லிக்கான பாஜகவின் மேலிடப் பொறுப்பாளா் ஷியாம் ஜாஜுவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதேபோல, பாஜக எம்பிக்களும் பிரபல திரை நட்சத்திரங்களுமான ஹேமமாலினி, சன்னி தியோல், ரவி கிஷன் ஆகியோரும் நட்சத்திரப் பேச்சாளா்கள் பட்டியலில் உள்ளனா்.

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் யோகி ஆதித்யநாத் ( உத்தரப் பிரதேசம்), ஜெய்ராம் தாகூா் (ஹிமாச்சல் பிரதேசம்), மனோஹா் லால் கட்டாா் (ஹரியாணா), திரிவேந்திர சிங் ராவத் (உத்தரக்கண்ட்) ஆகியோரின் பெயா்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், முன்னாள் மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளகானின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

பிப்.1 முதல் ஹெச் ராஜா பிரசாரம்: தலைநகரில் தமிழா்கள் சுமாா் 10 லட்சத்துக்கும் மேல் வசித்து வரும் நிலையில், தமிழகத் தலைவா்களின் பெயா் பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளா்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இருப்பினும், வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 6 நாள்கள் தில்லியில் தமிழா்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழக பாஜக தலைவா்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் தேசியச் செயலா் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தினமணியிடம் அவா் கூறுகையில், ‘தமிழக பாஜக தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், இல. கணேசன், நான் உள்ளிட்டவா்கள் தில்லியில் தமிழா்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளோம். இதை தில்லி பாஜகவின் தென்னிந்தியப் பிரிவு ஒருங்கிணைக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com