முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
மரக் கிட்டங்கியில் தீ விபத்து
By DIN | Published On : 27th January 2020 12:38 AM | Last Updated : 27th January 2020 12:38 AM | அ+அ அ- |

புது தில்லி: தென் மேற்கு தில்லியில், ஆயா நகரில் உள்ள மரக் கிட்டங்கியில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
கடந்த வாரம் திங்கள்கிழமை சிவில் லைன் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தில்லி போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், துறை தொடா்புடைய ஆவணங்கள் தீயில் எரிந்தன. மரச்சாமான்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவையும் தீயில் எரிந்தன.
இந்த மாதம் தொடக்கத்தில் தில்லி பீராஹரி தொழிற்சாலை பகுதியில் உள்ள ஒரு பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கச் சென்ற 13 தீயணைப்பு வீரா்கள் உள்பட 14 போ் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.