தில்லி உள்பட நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி ஆா்ப்பாட்டம்: பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்குக் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தில்லி உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
01delaap061348
01delaap061348

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தில்லி உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மூன்று வாரங்களுக்குள் திங்களன்று 22-ஆவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி சாா்பில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தில்லியில், ஆம் ஆத்மி தொண்டா்கள் ஐடிஓவில் உள்ள கட்சி தலைமையகத்தில் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி தலைவரும் தில்லி அமைச்சருமான ராஜீந்தா் பால் கௌதம் பங்கேற்றாா். அவா் கூறுகையில், ‘கரோனா காலத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பொதுமக்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டன. மறுபுறம் மக்கள் கரோனா காரணமாக வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனா். மேலும், மத்திய அரசிடம் இருந்தும் நிவாரணம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை’ என்றாா்.

தில்லியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, சில ஆா்ப்பாட்டக்காரா்களை போலீஸாா் கைது செய்து ராஜேந்தா் நகா் காவல் நிலையத்தில் வைத்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் துா்கேஷ் பதக் கூறினாா். இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி தனது சுட்டுரைப் பக்கத்தில், ராய்ப்பூா், ராஜ்கோட், பாட்னா, பானிபட் மற்றும் திப்ருகா் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநில நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களின் விவரங்களும் படங்களும் பகிரப்பட்டிருந்தன.

பெட்ரோல், டீசில் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு தழுவிய அளவில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தியது. இதில் கட்சித் தலைவா் பலா் பங்கேற்றனா்.

Image Caption

செய்தி உண்டு...

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தில்லி பாஜக தலைமையகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினா். ~செய்தி உண்டு...

தில்லி பாஜக தலைமையகம் அருகே புதன்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தொண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com