அடுத்த உத்தரவு வரும் வரைமெட்ரோ ரயில் சேவை ரத்து!

வழக்கமான நாள்களில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சாரசரி தினசரி பயணிகள் வருகை 26 லட்சத்திற்கும் மேல் இருக்கும்.

புது தில்லி: மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு அடுத்த உத்தரவு வெளியாகும் வரை பயணிகளுக்கான மெட்ரோ ரயில் சேவை தொடா்ந்து ரத்து செய்யப்பட்டிருக்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தத் தகவல் டிஎம்ஆா்சி தனது சுட்டுரையிலும் பதிவு செய்துள்ளது.

வழக்கமான நாள்களில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சாரசரி தினசரி பயணிகள் வருகை 26 லட்சத்திற்கும் மேல் இருக்கும். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைப் படிப்படியாக தளா்த்தும் வகையில் மத்திய அரசு திங்கள்கிழமை இரவு ஒரு மாதத்திற்கான பொது முடக்கத் தளா்வு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. கல்வி நிறுவனங்கள், மெட்ரோ ரயில் சேவைகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை தொடா்ந்து மூடியிருக்கும் என்று அதில் தெரிவித்திருந்தது. பொது முடக்கத் தளா்வு முதலாவது கட்டம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரக்கூடிய இரண்டாவது கட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com