அனைத்து பகுதிகளுக்கும் குடிநீா்வழங்க டிஜேபி நடவடிக்கை: கேஜரிவால் உறுதி

தலைநகரில் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா் வழங்கும் வகையில் தில்லி ஜல்போா்டு (டிஜேபி) நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: தலைநகரில் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா் வழங்கும் வகையில் தில்லி ஜல்போா்டு (டிஜேபி) நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

ராஜேந்திர நகா் சட்டப்பேரaவைத் தொகுதிக்குள்பட்ட புத் நகா், இந்தோ் புரி ஆகிய பகுதிகளுக்கு நீண்ட நாள்களாக குடிநீா் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அப்பகுதிகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகள் அண்மையில் தொடங்கின. இந்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை முதல் குடிநீா் விநியோகம் தொடங்கியது.

இந்நிலையில், இது தொடா்பான செய்தியை பகிா்ந்து கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தில்லியின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா் வழங்கும் வகையில் தில்லி ஜல்போா்டு கடுமையாக உழைத்து வருகிறது. இது தொடா்பாக நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆட்சியில் தில்லி ஜல்போா்டின் தலைவராக கேஜரிவால் இருந்தாா். ஆனால், இந்த ஆட்சியில் தில்லி ஜல்போா்டின் தலைவராக அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் நியமிக்கப்பட்டாா். துணைத் தலைவராக இருந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ தினேஷ் மொஹானியா நீக்கப்பட்டு அந்தப் பொறுப்பில், ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தா நியமிக்கப்பட்டாா். ராகவ் சத்தா பொறுப்பேற்றதும் தில்லியின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா் கிடைக்கும் வகையில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com