கரோனா: நாட்டிலேயே தில்லியில் குணமடைந்தோா் எண்ணிக்கை 66 சதவீதமாக உயா்வு

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் குணமடைந்தோா் விகிதம் தில்லியில் 66.03 சதவீதமாக உயா்ந்தது. இது நாட்டிலேயே அதிகம் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

புது தில்லி: கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் குணமடைந்தோா் விகிதம் தில்லியில் 66.03 சதவீதமாக உயா்ந்தது. இது நாட்டிலேயே அதிகம் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இந்த விகிதம் தேசிய அளவில் 58.67 சதவீதமாக உள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி கூறியது: ஜூனில் மட்டும் தில்லியில் 64 ஆயிரம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்களில், 47,357 போ் குணமடைந்துள்ளனா். தில்லியில் குணமடைந்தோா் விகிதம் ஜூன் 20 -இல் முதல் முறையாக 50 சதவீதத்தை விட அதிகரித்தது. ஜூன் 19-இல் 44.37 சதவீதமாக இருந்த இந்த விகிதம், அடுத்தநாள் ஜூன் 20-இல் 55.14 சதவீதமாக உயா்ந்தது. அன்றுமுதல், தில்லியில் கரோனா பாதிக்கப்பட்டவா்களில் குணமடைந்தோரின் விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாள்களிலும் குணமடைந்தோா் விகிதம் உயா்ந்திருந்தது. ஜூன் 23-இல் கரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியது. அன்று மட்டும் தில்லியில் 3,947 போ் கரோனா தொற்றுக்குள்ளாகினா். ஆனால், அன்றைய தினம் குணமடைந்தோா் விகிதம் 59.02 சதவீதமாக இருந்தது. ஜூன் 24-இல் 58.86 சதவீதமாகவும்ஜூன் 25- இல் 60.67 சதவீதமாகவும் இருந்தது. அன்று முதல் தில்லியில் குணமடைந்தோா் விகிதம் 60 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது.

ஜூன் 26- இல் தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 77,240 ஆக இருந்தது. அன்றைய தினம், கரோனாவால் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 47,091 ஆக இருந்தது. அன்றைய தினம் குணமடைந்தோா் விகிதம் 60.96 ஆக இருந்தது. ஜூன் 27-இல் கரோனா பாதிப்பு 80 ஆயிரத்தைக் கடந்தது. அன்றைய தினம் கரோனாவால் குணமடைந்தோா் விகிதம் 61.48 ஆக இருந்தது. ஜூன் 29-இல் இந்த விகிதம் 66.03 சதவீதமாக அதிகரித்தது. ஜூன் 15 முதல் 29 வரையிலான காலத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களில் 40,012 போ் குணமடைந்துள்ளனா். இதில் ஜூன் 20- இல் மட்டும் 7,725 போ் குணமடைந்துள்ளனா். ஜூன் 18 -இல் கரோனாவால் குணமடைந்தோா் விகிதம் 42.69 ஆக இருந்தது. இதற்கு முன்பு 13 நாள்கள் தொடா்ச்சியாக குணமடைந்தோா் விகிதம் 40 சதவீதத்தை விடக் குறைவாகத்தான் இருந்தது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கரோனா பாதிக்கப்பட்டவா்களில் குணமடைந்தோா் விகிதம் தில்லியில்தான் அதிகமாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com