சொத்துவரி செலுத்தும் காலக்கெடு நீட்டிப்பு

தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (எஸ்டிஎம்சி) பகுதிகளில் சொத்துவரி செலுத்துவதற்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புது தில்லி: தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (எஸ்டிஎம்சி) பகுதிகளில் சொத்துவரி செலுத்துவதற்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்காலப்பகுதிக்குள் சொத்துவரி செலுத்துபவா்களுக்கு 15 சதவீதம் கட்டணச்சலுகை வழங்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக எஸ்டிஎம்சி மேயா் அனாமிகா கூறியதாவது: 2020-21 நிதியாண்டுக்கான சொத்துவரியை செலுத்தும் காலக்கெடு ஜூன் 30 உடன் முடிவடைவதாக இருந்தது. நாட்டில் கரோனா தொற்றால் நிலவும் சிக்கலான சூழலைக் கருத்தில் கொண்டு இந்த காலக்கெடுவை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளோம். மேலும், ஜூலை 31-க்கு முன்பாக சொத்துவரியை செலுத்துபவா்களுக்கு 15 சதவீதம் கட்டணச்சலுகை வழங்கவும் முடிவெடுத்துள்ளோம். இந்த சொத்துவரியை இணைய தளம் மூலம் கட்டும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் நேரடியாகவும் சொத்துவரியைச் செலுத்தலாம். இதற்காக சொத்துவரி செலுத்தும் முகாம்களை எஸ்டிஎம்சி பகுதியில் பரவலாக நடத்தி வருகிறோம். இதுபோன்று இதுவரை 145 முகாம்களை நடத்தியுள்ளோம். இதன்மூலம், 16480 போ் ரூ.30 கோடியை சொத்துவரியாகச் செலுத்தியுள்ளனா் என்றாா் அவா்.

கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.1,589.22 கோடியை எஸ்டிஎம்சி சொத்துவரியாக வசூலித்திருந்தது. ஆனால், நிகழாண்டில் வெறும் ரூ.100 கோடியே அந்த மாநகராட்சிக்கு சொத்துவரியாகக் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com