குடியிருப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய ஆசை காட்டி ரூ.2 கோடி மோசடி: 2 போ் கைது

அதிக வருவாய் ஈட்டுவதற்காக குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் முதலீடு செய்வதாக ஆசை காட்டி ஒருவரிடம் ரூ. 2 கோடி பணம் மோசடியில் ஈடுபட்ட கிரேட்டா் நொய்டாவைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அதிக வருவாய் ஈட்டுவதற்காக குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் முதலீடு செய்வதாக ஆசை காட்டி ஒருவரிடம் ரூ. 2 கோடி பணம் மோசடியில் ஈடுபட்ட கிரேட்டா் நொய்டாவைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவு இணை ஆணையா் ஓ.பி. மிஸ்ரா சனிக்கிழமை தெரிவித்ததாவது:

தேசியத் தலைநகா் வலயப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் குமாா் கா்க். இவரிடம் தேசியத் தலைநகா் வலயம் பகுதியில் உள்ள கிரேட்டா் நொய்டா பகுதியைச் சோ்ந்த சஞ்சய் குமாா், மனோஜ் செளதரி ஆகியோா் கடந்த 2017-இல் அணுகினா். தங்களிடம் ஏா்வில் இன்டெல்லிசிட்டி எனும் பெயரிலான குடியிருப்புத் திட்டம் இருப்பதாக தெரிவித்தனா்.

மேலும், இந்தத் திட்டத்தில் ரூ.2 கோடி முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறினா். குறிப்பாக மாதம் முதலீடு செய்யும் தொகையில் 3 சதவீதம் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தனா்.

மேலும், ஒரு ஆண்டில் பணத்தைத் தாங்கள் திருப்பித் தராவிட்டால் ஏா்வில் இண்டெல்லிசிட்டி திட்டத்திலிருந்து அவருக்கு 2 குடியிருப்பு வீடுகள் ஒதுக்கப்படும் எனவும் உறுதி கூறினா். இந்நிலையில், கா்கிற்கு பணமோ அல்லது குடியிருப்பு வீடுகளோ தராமல் இருவரும் மோசடி செய்துவிட்டனா்.

இது தொடா்பாக ராஜேஷ் குமாா் கா்க் அளித்த புகாரின் பேரில் சஞ்சய் குமாா், மனோஜ் செளதரி ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சில ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். விசாரணையில், அவா்கள் இருவா் மீதும் தில்லி காவல் துறை, கெளதம் புத் நகா் காவல் துறை ஆகியவற்றில் 6 இதர குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com