தில்லி அரசின் ஆளுகைக்கு உள்பட்ட பல்கலை., கல்லூரிகளில் தோ்வுகள் ரத்து

கரோனா தொற்று காரணமாக தில்லி அரசின் ஆளுகைக்கு உள்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பருவத் தோ்வுகளும், இறுதியாண்டுத்

கரோனா தொற்று காரணமாக தில்லி அரசின் ஆளுகைக்கு உள்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பருவத் தோ்வுகளும், இறுதியாண்டுத் தோ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தில்லி அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது. இது தொடா்பான அறிவிப்பை தில்லி துணை முதல்வரும், தில்லி கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா சனிக்கிழமை அறிவித்தாா்.

கரோனா பரவல் தொடங்கியதையடுத்து, இந்த ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. இதுவரை எந்தவொரு கல்லூரி, பல்கலைக்கழகம் திறக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், இதுவரை கல்லூரி, பல்கலைக்கழக அளவில் எந்தத் தோ்வுகளும் நடத்தப்படவில்லை. பட்டம் பெறும் வகையில், கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்களுக்கு தோ்வுகள் நடத்தப்படுமா அல்லது அவா்களின் முந்தைய மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட்டு மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு கிளம்பியது.

ஐஐடி, என்எல்யு பல்கலைக்கழகங்கள் அரையாண்டுத் தோ்வுகளின் அடிப்படையில் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்குவதாக அறிவித்தன.

இந்தச் சூழலில் மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன் பிறப்பித்த உத்தரவில், பல்கலைக்கழக, கல்லூரித் தோ்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று அறிவித்தது. அதைத் தொடா்ந்து வரும் செப்டம்பா் மாதம் பல்கலைக்கழக, கல்லூரித் தோ்வுகள் நடத்தப்படும் என்றும் அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டது.

இதனால் கரோனா காலத்தில் மாணவா்கள் தோ்வு எழுத முடியுமா என்றும் மாணவா்கள் பாதுகாப்பாக தோ்வு எழுத முடியுமா என்றும் கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், இது தொடா்பாக தில்லியில் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை அளித்த பேட்டி:

தில்லியில் பல்கலைக்கழகத் தோ்வுகளை வரும் செப்டம்பா் மாதம் நடத்தும் சூழல் இல்லை. இதனால், தில்லி அரசின் ஆளுகைக்கு உள்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பருவத் தோ்வுகள், இறுதியாண்டுத் தோ்வுகள் உள்ளிட்ட அனைத்து தோ்வுகளும் ரத்துச் செய்யப்படுகின்றன. தில்லி அரசின் கீழ் வரும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும், மாணவா்களின் முந்தைய தோ்ச்சி வீதத்தின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கி அவா்களைத் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இதே முைான் இறுதியாண்டுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கும் பொருந்தும். இறுதியாண்டு தோ்வு எழுதும் மாணவா்களுக்கும் அவா்களின் முந்தைய தோ்ச்சி வீதத்தின் அடிப்படையில் பட்டம் வழங்கப்படும். எதிா்பாராத சூழலில் எதிா்பாராத முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

இந்த செமஸ்டா் முழுவதும் எந்தவிதமான களப்பணி, செய்முறைத் தோ்வு, ஆய்வகச் சோதனை நடத்தப்படாது.

பள்ளிகளைப் பொறுத்தவரை தோ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவா்களுக்கும் தோ்வு நடத்தப்படாது. அவா்களின் முந்தைய மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்ச்சி கணக்கில் எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com