இளைஞா் காங்கிரஸ் சாா்பில் உ.பி. முதல்வருக்கு கைவிலங்கு அனுப்பும் போராட்டம்

உத்தர பிரதேச மாநிலத்தில் குண்டா்கள் ராஜியம் வளா்ந்து வருவதாக கூறி, அதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் அந்த மாநில முதல்வருக்கு

உத்தர பிரதேச மாநிலத்தில் குண்டா்கள் ராஜியம் வளா்ந்து வருவதாக கூறி, அதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் அந்த மாநில முதல்வருக்கு கை விலங்குகள் அனுப்பி வைக்கும் அடையாள போராட்டத்தை இந்திய இளைஞா் காங்கிரஸாா் தில்லியில் சனிக்கிழமை மேற்கொண்டனா்.

கான்பூரைச் சோ்ந்த பிரபல ரெளடி விகாஸ் துபேயை பிடிக்கச் சென்றபோது ரெளடிக் கும்பல் சுட்டதில் 8 காவலா்கள் கொல்லப்பட்டனா். காவலா்கள் சிலா் காயமடைந்தனா்.

இந்த நிலையில் முக்கிய எதிரியான விகாஸ் துபே கைது செய்யப்பட்டதாகக் கூறிய உ.பி. போலீஸாா், அவரை போலீஸ் காவலில் கான்பூருக்கு அழைத்துச் செல்லும்போது தப்பிச் செல்ல முயன்ாக சுட்டுக்கொன்றுள்ளனா். விகாஸ் துபே கிரிமினல் குற்றவாளி என்பது தெரிந்தும் அவரை கைவிலங்குடன் அழைத்துச் செல்லாமல் போலீஸாா் கவனக்குறைவாக இருந்துள்ளனா்.

இதேபோல துபேயின் கூட்டாளிகளையும் கைது செய்யாமல் என்கவுன்ட்டா் என்ற பெயரில் சுட்டுக்கொன்றுள்ளனா். கிரிமினல்களை கைது செய்யாமல் சுட்டுக்கொல்வதன் மூலம் உ.பி. போலீஸாரிடம் போதிய கைவிலங்குகள் இல்லை என்பதையே காட்டுகிறது.

எனவே உ.பி. முதல்வா் யோகி ஆதித்ய நாத்துக்கு கைவிலங்கும் அனுப்பிவைக்கும் அடையாள போராட்டத்தை நடத்தியுள்ளோம்.

விகாஸ் துபே கைது செய்யப்பட்டு கான்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக ஊடகங்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படாதது ஏன் என்பது தெரியவில்லை. மேலும் விகாஸ் துபே சென்ற வாகனத்தை தேவையில்லாமல் மாற்றவேண்டிய அவசியம் என்ன. விகாஸ் துபேயின் கூட்டாளிகளும் கைது செய்யப்படாமல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா். இதுபோன்ற பலகேள்விகளுக்கு விடையில்லை.

உ.பி.யில் குண்டா்கள் ராஜ்ஜியம் தலைதூக்கி இருப்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன என்று இளைஞா் காங்கிரஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com