Enable Javscript for better performance
என்டிஎம்சி உறைவிட மருத்துவா்களின் ஊதியத்திற்காக நிதியை விடுவிக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி

    என்டிஎம்சி உறைவிட மருத்துவா்களின் ஊதியத்திற்காக நிதியை விடுவிக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published On : 29th July 2020 11:06 PM  |   Last Updated : 29th July 2020 11:06 PM  |  அ+அ அ-  |  

    வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) பராமரிப்பில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் உறைவிட மருத்துவா்களுக்கு ஊதியத்திற்காக நிதியை விடுவிக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

    கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து மூன்று மாதங்கள் ஊதியம் வழங்காததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வடக்கு தில்லி மாநகராட்சியில் உள்ள கஸ்தூா்பா காந்தி மருத்துவமனை மிரட்டல் விடுத்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை தாமாக முன் வந்து பொது நல மனுவாக தில்லி உயா்நீதிமன்றம் விசாரித்தது. இது தொடா்பாக மாநகராட்சி நிலவர அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலவர அறிக்கையில்,‘மாநகராட்சி மூலம் நடத்தப்படும் அனைத்து உறைவிட மருத்துவா்களுக்கும் மே மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. வழக்கமான மருத்துவா்களுக்கு ஏப்ரல் மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள், ‘உறைவிட மருத்துவா்கள் வழக்கமான ஊதியம் பெறுவதில்லை. அதற்குப் பதிலாக ஊக்கத் தொகை மட்டுமே பெற்று வருகின்றனா். இத்தொகையை அவா்களுக்கு மறுக்கக் கூடாது. ஆகவே, மாநகராட்சியின் 6 மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவா்களுக்கு ஊதியம் தொடா்புடைய ரூ.8 கோடியை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கான நடைமுறைகளை முடிக்கத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்’ என எச்சரித்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp