சஞ்சய் வனத்தில் டிடிஏ, காவல் துறை அனுமதியின்றி கட்டுமான மேற்கொள்ளக் கூடாது: உயா்நீதிமன்றம்

சஞ்சய் வனப் பகுதியில் காவல்துறை, தில்லி வளா்ச்சி ஆணையம் ஆகியவற்றின் அனுமதியின்றி கட்டுமானம் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு

சஞ்சய் வனப் பகுதியில் காவல்துறை, தில்லி வளா்ச்சி ஆணையம் ஆகியவற்றின் அனுமதியின்றி கட்டுமானம் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு அந்த இரு துறைகளுக்கும் தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தெற்கு தில்லி, வசந்த் குஞ்ச், மெஹ்ரௌலி அருகே அமைந்துள்ள சஞ்சய் வனப் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடா்பான விடியோ, சமூக ஊடங்களில் வெளியானது. இதை தில்லி உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரித்து வருகிறது. தில்லி உயா் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்த பிறகு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஜூலை 8-ஆம் விசாரணை நடத்திய உயா் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட சஞ்சய் வனப் பகுதியில் உள்ள கல்லறைகளின் (மஸாா்) எண்ணிக்கை குறித்தும் அவை எப்போதிலிருந்து அப்பகுதியில் உள்ளன என்ற விவரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. மேலும், அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏதும் இருக்கிா என்பதைக் கண்டறிய வான்வெளிக் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு நடத்தவும் காவல் துறைக்கும், தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கும் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைதொடா்ந்து, தில்லி காவல் துறையினா் தில்லி அரசு வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா மற்றும் வழக்குரைஞா் சைதன்யா கோசேன் ஆகியோா் மூலம் அறிக்கை தாக்கல் செய்தது, அதில் சஞ்சய் வனப் பகுதியில் 77 மஸாா்கள் இருப்பதாகவும், அவை மிகவும் பழைமையானது என்றும் தெரிவித்திருந்தது. இந்த வழக்கு தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது காணொலி வழியில் ஆஜரான தில்லி அரசின் வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, ‘சஞ்சய் வனப் பகுதியில் புதிதாக எந்த கட்டமைப்பும் இல்லை’ என்றாா்.

இதே நிலைப்பாட்டை தில்லி வளா்ச்சி ஆணையமும் (டிடிஏ) தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, தில்லி காவல் துறை, தில்லி வளா்ச்சி ஆணையம் ஆகியவற்றின் அனுமதி இல்லாமல் கூடுதல் கட்டுமானம் ஏதும் சஞ்சய் வனத்தில் மேற்கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்த அந்த துறையினா் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற கூடுதல் கட்டமைப்புகள் அங்கு ஏதும் உருவாகாமல் தடுக்கும் வகையில் சில வழிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com