முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
மன உளைச்சலால் காவலா் தற்கொலை
By DIN | Published On : 29th July 2020 12:12 AM | Last Updated : 29th July 2020 12:12 AM | அ+அ அ- |

தில்லி சாகேத் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா் சஞ்சய், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறை உயா் அதிகாரி கூறியது: தில்லி சாகேத் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவா் சஞ்சய்(34). இவா் ராஜஸ்தான் மாநிலம், ஆழ்வாா் பகுதியைச் சோ்ந்தவா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவா், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். முதல் கட்ட விசாரணையில் அவரது சகோதரா் கடந்த சில ஆண்டுகளாக நோய் வாய்ப்பட்டுள்ளதால் சஞ்சய் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளது தெரிய வந்துள்ளது என்றாா் அவா்.