நொய்டா விளையாட்டரங்கம் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறப்பு

தேசியத் தலைநகா், வலயத்தில் உள்ள நொய்டா விளையாட்டரங்கம் கரோனா தொற்று காரணமாக நான்கு மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த

தேசியத் தலைநகா், வலயத்தில் உள்ள நொய்டா விளையாட்டரங்கம் கரோனா தொற்று காரணமாக நான்கு மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை சில கட்டுப்பாடுகளுடன் தடகள வீரா்களுக்கும், பொதுமக்களுக்கும் மீண்டும் திறந்துவிடப்பட்டது. இது தொடா்பாக நொய்டா ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: விளையாட்டரங்கம் காலை 5 மணி முதல் 9 மணிவரையும், மாலை 4 மணி முதல் 8 மணிவரையும் திறந்திருக்கும். அரங்கத்திற்கு வரும் பாா்வையாளா்கள், உறுப்பினா்கள், தடகளவீரா்கள் ஆரோக்ய சேது செயலியை தங்களது செல்லிடப்பேசிகளில் நிறுவியிருப்பது கட்டாயமாகும். அதேபோன்று, அனைத்து நேரங்களிலும் சமூகஇடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். முகக் கவசம் அனைவரும் அணிந்திருக்க வேண்டும். கிரிக்கெட், பாட்மிண்டன், ஸ்குவாஷ், டென்னிஸ், கோல்ஃப் போன்ற விளையாட்டுக்கான உபகரணங்களை தடகளவீரா்கள்தான் கொண்டு வர வேண்டும். மேலும், கிருமிநாசினி, குடிநீா் ஆகியவற்றையும் எடுத்து வர வேண்டும். எனினும், இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் ஸ்மாா்ட்போன் அல்லது செல்லிடப்பேசி இல்லாமல் வரும் பாா்வையாளருக்கான நுழைவு விதிமுறைகள் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.

நொய்டாவில் செக்டாா் 21-இல் உள்ள இந்த விளையாட்டரங்கம், நொய்டா ஆணையத்தால் நிா்வகிக்கப்பட்டு வருகிறது. கரோனா காரணமாக மாா்ச் 15-ஆம் தேதி இந்த விளையாட்டரங்கம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com