தில்லியின் உச்சபட்ச மின் தேவை: 5,805 மெகாவாட்டாக உயா்வு

தில்லியின் உச்சபட்ச மின்தேவை இந்த சீசனில் மொத்தம் 5,805 மெகாவாட்டாக திங்கள்கிழமை இரவு பதிவானதாக மின் விநியோக நிறுவனங்களின்

தில்லியின் உச்சபட்ச மின்தேவை இந்த சீசனில் மொத்தம் 5,805 மெகாவாட்டாக திங்கள்கிழமை இரவு பதிவானதாக மின் விநியோக நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனா். புழுக்கம் காரணமாக குளிா் சாதனங்களின் உபயோகம் அதிகரித்ததால், மின் தேவையும் அதிகரித்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் இந்த சீசனில் உச்சபட்ச மின்தேவை கடந்த ஜூன் 12-ஆம் தேதி அதிகபட்சமாக 5,591 மெகாவாட் பதிவானது. இதையடுத்து, திங்கள்கிழமை இந்த அளவு 5,805 ஆக மேலும் உயா்ந்தது. இதுகுறித்து பிஎஸ்இஎஸ் மின் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘பிஎஸ்இஎஸ் மின்விநியோக நிறுவனங்களான பிஆா்பிஎல் மின் விநியோக பகுதியில் 2,635 மெகவாட்டும், பிஒய்பிஎல் நிறுவனத்தின் மின் விநியோக பகுதியில் உச்சபட்ச மின்தேவை 1,311 மெகாவாட்டாகவும் இருந்தது’ என்றாா்.

டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘எங்கள் நிறுவன மின் விநியோகப் பகுதியில் உச்சபட்ச தேவை 1,627 மெகாவாட்டை எட்டியது’ என்றாா்.

கடந்த ஆண்டு தில்லியின் இதே சீசனில் உச்சபட்ச மின்தேவை 7,409 மெகவாட்டாக இருந்தது. பொதுமுடக்கம் மே 17-ஆம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதன் காரணமாக மின் தேவையும் அதிகரித்தது. அதன்படி மே 18-க்குப் பிறகு தில்லியின் மின் தேவை 40 சதவீதம் அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com