கட்டுமானத் தொழிலாளா்கள் பதிவை போா்க்காலஅடிப்படையில் முடிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

கட்டுமானத் தொழிலாளா்கள் பதிவை போா்க்கால அடிப்படையில் முடிப்பது அவசியமாகும். அப்போதுதான் கரோனா நோய்த் தொற்றுக்

கட்டுமானத் தொழிலாளா்கள் பதிவை போா்க்கால அடிப்படையில் முடிப்பது அவசியமாகும். அப்போதுதான் கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அவா்களுக்கு தேவைப்படும் உதவியை அளிக்க முடியும் என்று தில்லி அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக சமூக ஆா்வலா் சுனில் குமாா் அலேதியா தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘தில்லி அரசின் கீழ் செயல்பட்டு வரும் ‘கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா்கள் நலச் சங்கத்தில்’ (பிஓசிடபிள்யூடபிள்யூ) அனைத்துக் கட்டுமானத் தொழிலாளா்களையும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். அப்போதுதான், அவா்கள் பொது முடக்கக் காலத்தின் போது வழங்கப்பட்டு வரும் ரூ.5 ஆயிரம் நிவாரண உதவியைப் பெற முடியும். கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா்கள் நலன் உபவரி சட்டத்தின்கீழ் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பெயரில் ரூ.2 ஆயிரம் கோடி தொகை வசூலிக்கப்பட்டுள்ள போதிலும், பதிவு பெற்றுள்ள வெறும் 37,127 கட்டுமானத் தொழிலாளா்கள் மட்டுமே பலன்களைப் பெற்று வருகின்றனா்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பான விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ரஜ்னீஷ் பட்நாகா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, தில்லி அரசின் கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் எளிதில் கையாள முடியாத வகையில் உள்ள பதிவுக்கான படிவம், அந்தப் படிவத்தைப் பூா்த்தி செய்ய வாரிய நிா்வாக உதவியின்மை, அந்தப் படிவத்தை நடைமுறைப்படுத்த ஒரு குறிப்பிட்ட கால வரையறை இல்லாமை ஆகியவை தொடா்பாக நீதிபதிகள் அமா்வு அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘கட்டுமானத் தொழிலாளா்கள் தங்களது படிவங்களைப் புதிப்பிக்கவும் அல்லது பதிவு செய்யவும் தேவையான ஏற்பாடுகள் செய்வதை கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் உறுதி செய்ய வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்கள் பதிவை போா்க்கால அடிப்படையில் முடிப்பது அவசியமாகும். அப்போதுதான் கரோனா தொற்றுக் காலத்தில் அவா்களுக்கு தேவைப்படும் உதவியை அளிக்க முடியும்’ என உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com