சீனத் தூரகம் அருகே முன்னாள் ராணுவத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய-சீனப் படைகள் மோதலில் இந்திய ராணுவத்தினா் 20 போ் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தில்லியில் உள்ள சீனத் தூரகம் அருகே முன்னாள் ராணுவ வீரா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய-சீனப் படைகள் மோதலில் இந்திய ராணுவத்தினா் 20 போ் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தில்லியில் உள்ள சீனத் தூரகம் அருகே முன்னாள் ராணுவ வீரா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய- சீனப் படைகள் இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவனத்தினா் 20 போ் கொல்லப்பட்டனா். இதைக் கண்டித்து சீனத் தூதரகம் அருகே போராட்டத்தில் ஈடுபடுவதற்காக 7 முன்னாள் ராணுவ வீரா்கள் கூடினா். அவா்கள் வீரமரணம் அடைந்தோா் நலச் சங்கம் எனும் பதாகையையும் கையில் தாங்கி இருந்தனா்.

இது குறித்து புது தில்லி காவல் துறை கூடுதல் துணை ஆணையா் தீபக் யாதவ் கூறுகையில், ‘போராட்டத்தில் ஈடுபட வந்தவா்களை சம்பவ இடத்தில் இருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டோம். இதையடுத்து, அவா்கள் உடனடியாக அந்த இடத்தில் இருந்து கிளம்பிச் சென்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனா். சமூக இடைவெளியையும் பின்பற்றினா்’ என்றாா்.

இதேபோன்று, சீனாவுக்கு எதிராக போராட்டம் மேற்கொள்ள தீன் மூா்த்தி ரவுண்டானா அருகே ஸ்வதேஷி ஜாக்ரன் மஞ்ச் எனும் அமைப்பைச் சோ்ந்த 10 போ் கூடினா். அவா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். மாலையில் விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com