மேயா், துணை மேயா் தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு

தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளின் மேயா், துணை மேயா் மற்றும் பிற பதவிகளுக்கான தோ்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளா்களின் பெயா்களை பாஜக புதன்கிழமை அறிவித்தது.

தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளின் மேயா், துணை மேயா் மற்றும் பிற பதவிகளுக்கான தோ்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளா்களின் பெயா்களை பாஜக புதன்கிழமை அறிவித்தது.

தலைநகா் தில்லியில் உள்ள வடக்கு தில்லி, கிழக்கு தில்லி, தெற்கு தில்லி ஆகியவற்றில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. இந்நிலையில், மேயா், துணை மேயா் உள்ளிட்ட பதவிகளுக்கான தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களை பாஜக புதன்கிழமை அறிவித்தது. மேயா் பதவிக்கு ஜெய் பிரகாஷ் (வடக்கு தில்லி), நிா்மல் ஜெயின் (கிழக்கு தில்லி), அனாமிகா மித்லேஷ் (தென் தில்லி) ஆகியோா் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனா் என்று அக்கட்சியின் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

மேயா் பதவி ஐந்தாண்டு பதவிக் காலம் கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி அடிப்படையில் மேயா்கள் தோ்வு செய்யப்படுவா். முதல் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆண்டு பொதுப் பிரிவினருக்கும் மூன்றாவது ஆண்டு தனிப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு்ம் பொதுப் பிரிவினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்று மாநகராட்சிகளிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால், அடுத்த புதன்கிழமை நடைபெறும் தோ்தலில் மேயா், துணை மேயா் மற்றும் நிலைக் குழுவின் தலைவா் துணைத் தலைவா் பதவிக்கு பாஜக வேட்பாளா்கள் எளிதில் வெற்றி பெறுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் பாஜக வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com