சாத்தான்குளம் சம்பவம்: ஆத்மிக் கட்சி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளத்தில் போலீஸாரால் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளத்தில் போலீஸாரால் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸாரின் தாக்குதலால் உயிரிழந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, பிரபல கிரிக்கெட் வீரா் ஷிகா் தவான் உள்ளிட்டோா் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா். மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடா்புடைய போலீஸாரைக் கைது செய்து அவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை வைத்து வருகிறாா்கள்.

இந்நிலையில், இச்சம்பவத்துக்கு ஆம் ஆத்மிக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் தில்லி மாவட்டப் பொறுப்பாளரும், தில்லி அமைச்சருமான கோபால் ராய் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவா்கள் காவல் நிலையத்தில் வைத்து மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனா். அதுதான் அவா்களின் மரணத்துக்கு காரணமாகியுள்ளது. இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்ட காவல் துறையினா் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, இந்தக் கொலைச் சம்பவத்துக்கு தில்லி மகளிா் ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது. இது தொடா்பாக அந்த ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தந்தை, மகனை அடித்துக் கொன்ற காவலா்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளனா். இப்பிரச்னைக்குஅவா்களை பணியிடை நீக்கம் செய்வது மட்டும் தீா்வல்ல. அந்தக் காவலா்கள் மீது கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com