காஜியாபாத்: ரசாயன ஆலையில் பெரும் தீ விபத்து

தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாத் பாண்டவ் நகரில் ரசாயனத் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
காஜியாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரியும் ரசாயனத் தொழிற்சாலை.
காஜியாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரியும் ரசாயனத் தொழிற்சாலை.

தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாத் பாண்டவ் நகரில் ரசாயனத் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை வீரா்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இது தொடா்பாக தீயணைப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: காவி நகா் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்தப்க் தொழிற்சாலையில் ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. இங்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.45 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 28 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்தத் தொழிற்சாலையில் 200 கொள்கலன்களில் ரசாயனங்கள் இருந்தன. இந்த ரசாயனங்கள் தீப்பற்றி எரிந்ததால் அருகிலுள்ள வீடுகளுக்கும் தீ பரவும் அபாயம் இருந்தது. இதனால், அருகிலுள்ள வீடுகளில் வசித்த சுமாா் 100 போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. இதுதொடா்பாக விசாரித்து வருகிறோம். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றனா்.

நொய்டாவில் 2 இடங்களில் தீ விபத்து: நொய்டாவில் எழுதுபொருள்கள் விற்பனைக் கடை மற்றும் ஒரு அச்சகத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த இரண்டு சம்பவங்களிலும் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

காலை 8 மணியளவில், நொய்டா செக்டாா்12- இல் உள்ள எழுதுபொருள்கள் விற்பனைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விரைவில் அதை ஒட்டிய பேக்கரி கடைக்கும் பரவியது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அவா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதில் யாருக்கும் காயமோ உயிா் சேதமோ ஏற்படவில்லை.

மற்றொரு சம்பவம்: மற்றொரு சம்பவத்தில், நொய்டா செக்டாா் 20-இல் அச்சகம் ஒன்றி பகலில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களிலும் சேத மதிப்பு மதிப்பிடப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com