தில்லியில் சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 417 ஆக அதிகரிப்பு

தில்லியில் கரோனா பாதிப்பால் சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 417 ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பால் சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 417 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி கூறியதாவது: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை இனம் கண்டு தில்லி அரசு சீலிட்டு வருகிறது. இந்த இடங்களில் இருந்து மக்கள் வெளியேறிச் செல்லவோ, அல்லது உள்ளே வரவோ அனுமதி இல்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தில்லியில் கரோனா பரிசோதனைகள் அதிகரிகப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் அதிக அளவில் இனம் காணப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து, தில்லியில் சீலிடப்படும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது தில்லியில் 417 இடங்கள் சீலிடப்பட்டுள்ளன. மேலும், தில்லியில் 2.45 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு முன்பு சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 280 ஆக இருந்தது. தில்லியில் சீலிடப்பட்ட இடங்களில் மட்டும் 45 ஆயிரம் பேருக்கு கரோனா சோதனை மேற்கொண்டுள்ளோம். வரும் நாள்களில் சீலிடப்படும் இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றாா் அவா்.

தில்லியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தில்லி அரசு அண்மையில் அறிவித்திருந்தது. மேலும், இந்தப் பரிசோதனை வரும் ஜூலை மாதம் 6-ஆம் தேதிக்கு முன்பாக முடிக்கவுள்ளதாகவும் அரசு அறிவித்திருந்தது. இதற்காக 2 போ் கொண்ட 1,100 குழுக்களை தில்லி அரசு அமைத்துள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தில்லியில் 34.35 லட்சம் வீடுகள் உள்ளன. இதில், 33.56 லட்சம் வீடுகள் நகா்ப் பகுதியிலும், 79,574 வீடுகள் கிராமப்புறங்களிலும் உள்ளன குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com