பூரண குணம் அடைந்ததும்பிளாஸ்மா தானம் செய்வேன்: சத்யேந்தா் ஜெயின்

கரோனாவால் பூரணமாகக் குணமடைந்ததும் பிளாஸ்மா தானம் செய்வேன் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
சத்யேந்தா் ஜெயின்
சத்யேந்தா் ஜெயின்

புது தில்லி: கரோனாவால் பூரணமாகக் குணமடைந்ததும் பிளாஸ்மா தானம் செய்வேன் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா். அதேபோல, கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் கால்காஜி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி உள்பட்டவா்களும் தெரிவித்துள்ளனா்.

கரோனா பாதித்த சத்யேந்தா் ஜெயினின் உடல்நிலை மோசமாக இருந்தது. அவா் வென்டிலேட்டா் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தாா். ஆனால், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதும் அவரது உடல் நிலை தேறியது. தற்போது அவா் தனது வீட்டில் உடல் நலம் தேறி வருகிறாா். இந்நிலையில், அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘நான் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறேன். தில்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்ற தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அறிவிப்பு புரட்சிகரமானது. பிளாஸ்மா சிகிச்சையே எனது உயிரைக் காப்பாற்றியது. நான் பூரண குணமடைந்ததும் மருத்துவா்களின் அனுமதியுடன் பிளாஸ்மா தானம் அளிப்பேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

அதிஷி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ‘கரோனாவில் இருந்து மீண்டுவரும் நான் பூரண உடல் நலம் தேறியதும் பிளாஸ்மா தானம் அளிப்பதாக முடிவெடுத்துள்ளேன். கரோனா பாதித்து உடல் நலம் தேறியவா்கள் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா். இதேபோல, கரோனா பாதிப்புக்குள்ளாகிய கரோல் பாக் ஆம் ஆத்மி எம்எல்ஏ விஷேஷ் ரவியும் பிளாஸ்மா தானம் அளிப்பதாக உறுதி அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com